அருள்மிகு ஸ்ரீ நித்யகல்யாண பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் (ஆப்பூர்) (மலைக் கோவில்)
God Name : ஸ்ரீ நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தால் மயக்கமுற்ற ராம - லக்ஷ்மணர்களின் மயக்கத்தைத் தெளிவிக்க ஹனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்துக் கொண்டு பறந்து சென்றபோது, சிதறி விழுந்த மூலிகைகள் விழுந்து வளர்ந்த ஸ்தலமே ஔஷதகிரி எனக் கூறப்படுகிறது. மகரிஷிகள் பலரும் தவம் மேற்கொண்ட ஸ்தலம். அகஸ்திய மாமுனிவர் தவம் செய்த இடம். இரண்டாம் குலோத்துங்கச் சோழன் கட்டிய கோவில். 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோவில். 64 சித்தர்களும் தபஸ் செய்த இடம்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலமாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். சங்கு-சக்கரங்கள் கொண்டும், அபய-வரத ஹஸ்தங்கள் கொண்டும், சதுர் புஜங்களுடன் கூடிய அழகிய திருமேனி. பெருமாள் லட்சுமி ஸ்வரூபமாக இருப்பதால் பெருமாளுக்கு புடவை அணிவிக்கின்றனர். தாயார் சந்நிதி இல்லை. ஸ்ரீ லட்சுமி பாதங்களை சேவிக்கலாம். மண்டபத்தில் தசாவதார சிற்பங்கள் அழகாக உள்ளன. வடக்கில் வேணுகோபாலன், மேற்கில் வைகுந்தவாசன், தெற்கில் வராஹ மூர்த்தி - சுதைச் சிற்பங்களாக இடம் பெற்றுள்ளனர். சப்த கன்னியர்களையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.