அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் (திருமலைவையாவுர்)
God Name : பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், உற்சவர் - ஸ்ரீ வைகுண்டம் கண்ணபிரான்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவாரூர்
Call : +91-
பிருகு முனிவர் சௌபாக்ய மஹாயாகம் முடித்து, அதன் ஹவிர்பாகத்தை கொடுப்பதற்காக வைகுண்டம் செல்கிறார். ஸ்ரீஹரியோ மெய்மறந்து தூங்கும்பாவனையில், திருவிளையாடல் புரிகிறார். கோபமுற்ற முனிவர் விஷ்ணுவை மார்பில் உதைக்கிறார்.
இதனால் வருத்தமுற்ற மஹாலஷ்மி, பூமிக்கு வந்து, தவத்தில் ஆழ்ந்துவிடுகிறார். வராஹ அவதாரம் எடுக்க வேண்டியதை நினைவுபடுத்துவதே, முனிவரின் அச்செயல், என விளக்குகிறார் பகவான். பின்னர் மஹாலஷ்மி சமேதராக, ஆதிவராஹ மூர்த்தியாக, பிருகு முனிவருக்கு தரிசனம் தந்தார் என ஸ்தல வரலாறு.
ஸ்ரீ வராஹராக காட்சி தந்த பெருமாள் தான் பூலோகத்திலேயே தங்கி மக்களை ரட்சிப்பதற்காக தேவபர்வதத்தை பூமிக்கு கொண்டு வா என கருடனிடம் பணித்தார். கருடாழ்வாரும் பர்வதத்தை எடுத்துக் கொண்டு பறந்து வரும்போது, அது இரண்டு துண்டுகளாக பிளந்து ஒரு துண்டு கீழே விழுந்தது. மற்ற பகுதியை கருடன் பூமியில் ஓரிடத்தில் வைக்கிறார். அதில் கோவில் கொண்டு பக்தர்களை ரட்சிக்கின்றார் திருமால். அதுவே திருமலை-திருப்பதி ஆகும்.
விஜயநகர அரசன் ராஜா தோடர்மால் சிறந்த விஷ்ணு பக்தன். திருமலை-திருப்பதிக்கு திருப்பணிகள் செய்து கொண்டிருப்பவன். பர்வதத்தின் மற்றொரு பகுதி கீழே விழுந்தது அல்லவா? அது விழுந்த இடத்தை அரசனுக்கு சுட்டிக் காட்டி, அங்கே கோவில் ஒன்றை ஸ்தாபிக்குமாறு பணித்தாராம் திருமால். அதன்படி ராஜா தோடர்மால் எழுப்பிய கோவில் இது.
இத்தலத்தின் மீது பறக்கும்போது, சஞ்சீவி மலையை பூமியில் வைக்காமல் தனது வலது கரத்திலிருந்து இடது கரத்திற்கு மாற்றிக் கொண்டார் ஹனுமன். இதனால் இத்தலம் வையாவுர் என்றானது.
தேவ பர்வதத்தின் ஒரு பகுதி திருமலை, மறு பகுதி வையாவுர் என்பதால் இத்தலம் திருமலை-வையாவுர் எனப் பெயர் கொண்டது.
முனையக்கோன், பிராட்டிக்கோன் என்னும் பக்தர்களுக்காக கலியுகத்தில் பிரசன்ன வெங்கடேசராக, பிரசன்னம் ஆனார் என்றும், நடந்தே வந்ததால் குடையாக ஆதிசேஷன் வந்ததாகவும் ஸ்தல வரலாறு. வேங்கட திருமலையில் நடக்கும் உற்சவங்களனைத்தும் இங்கே நடக்கின்றன. சிரவண தீபம், பேழையடியில் கொதிக்கும் நெய் சாட்சி பிரசாதமாக கொடுப்பது பிரசித்தம்.
மலையடிவாரம்:
மலையடிவாரத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் மிகுந்த வரப்பிரசாதி. வாலை சுருட்டி சிரசின்மீது வைத்துக் கொண்டும், கையில் தாமரை மலர் ஏந்தியபடியும், ஆனந்த நடனம் புரியும் கோலம். சேவார்த்திகள் தங்களது பிரார்த்தனைகளை எழுதி கொப்பரையுடன் துணியில் கட்டி, ஆலயத்தில் கட்டுகிறார்கள். புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு தரும் குங்குமப்பூ பிரசாதத்தை 48 நாட்கள் உட்கொண்டால் குழந்தை பிறக்கும் என்று பட்டாச்சார்யர் தெரிவிக்கின்றார். இவ்வாலயத்தின் அருகே அரசு-வேம்பு-வில்வம் மூன்றும் இணைந்த விருட்சம் உள்ளது. விருட்சத்தினடியே நாகப் பிரதிஷ்டைகள். அதனடுவே சந்தான கோபாலன் விக்ரஹம்.
மலையடிவாரத்தில் வராஹ புஷ்கரணி.
மலைக்கோவில்:
மூலவர்: ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், உற்சவர்: ஸ்ரீ வைகுண்டம் கண்ணபிரான், தாயார்: ஸ்ரீ அலர் மேல் மங்கா.
தக்ஷிண சேஷகிரி, தக்ஷிண கருடகிரி, தக்ஷிண வேங்கடகிரி, வராஹ க்ஷேத்ரம், தென் திருப்பதி என்றெல்லாம் போற்றப்படும் இந்த ஷேத்ரம், 545 அடி உயர குன்றின் மீது அமைந்துள்ளது. சுமார் 500 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். வாகனங்கள் செல்லும் பாதையும் உள்ளது.
முதலில் ஆதிமூர்த்தியான ஸ்ரீ வராஹப் பெருமானை சேவிக்க வேண்டும். மஹாலஷ்மியுடன் ஆதி வராஹர், மேற்கே திருமுக மண்டலம் கொண்டு எழுந்தருளியுள்ளார்.
சீதாப்பிராட்டியுடன் தரிசனம் தரும் ஸ்ரீராமர், ராதா - ருக்மணியுடன் காட்சி தரும் ஸ்ரீ வேணுகோபாலன் என ஸ்ரீமந் நாராயணனின் நால்வகை அவதார மூர்த்தங்களையும் சேவித்து மகிழலாம்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆஜானுபாகு தோற்றத்தில், அழகான திருமேனியுடன், மேற்கே திருமுக மண்டலம் கொண்டு, பிரபையில் ஆதிசேஷனுடனும் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். சாளக்ராம மாலை, அஷ்டலட்சுமி ஆரம், ஸ்ரீ லட்சுமி ஆரம் ஆகியன அணிந்தும், தசாவாதாரக் கோலங்கள் கொண்ட ஆபரணங்களை ஒட்டியாணமாக அணிந்தும் காட்சி தருகின்றார். ஸ்ரீ தேவி - பூ தேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
சஹஸ்ரமாலை போன்ற அணிகலன்களுடன், உற்சவ மூர்த்தியாக ஸ்ரீ வைகுண்டம் கள்ளர்பிரான் சேவை சாதிக்கின்றார். உபயநாச்சிமார்கள் உடன் உள்ளனர்.
அலர்மேல்மங்காத் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ ராமாநுஜர், ஆழ்வாராதிகள், தேசிகன் ஆகியோரின் திருவுருவங்களை தனி சந்நிதிகளில் சேவிக்கலாம்.
மூலஸ்தான வாயிலில் திருப்பதியை போலவே ஜய - விஜயர் துவாரபாலகர்களாக உள்ளனர். மூலஸ்தான எதிரிலுள்ள சந்நிதியில் பெரிய திருவடியை சேவிக்கலாம்.
பதினாறு வித ஆயுதங்களை தனது பதினாறு திருக்கரங்களில் கொண்டு ஷட்கோண வடிவத்தில் காணப்படும் சுதர்ஸனரும், சதுர்புஜங்களுடன் காணப்படும் உக்ர ஜ்வாலா மூர்த்தியான நரசிம்மரும் காட்சி தருகின்றனர். ஒரே கல்லில் உருவான அபூர்வ திருவுருவம். யுகத்திற்கு ஒன்றாக நான்கு சக்கரங்களை தாங்கி நரசிம்மர் பத்மாசனத்தில் உள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.