அருள்மிகு அப்பன் வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் (திருமுக்கூடல்)

God Name : அப்பன் வெங்கடேசன், உற்சவர்: ஸ்ரீ நிவாசன்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவாரூர்

Call : +91-

பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கூடுமிடம் திருமுக்கூடல் எனப்படுகின்றது. திருப்பதிக்கு போய் ஸ்ரீ நிவாசப் பெருமாளை சேவிக்க ஆயத்தமான தொண்டைமான் சக்ரவர்த்தியை, போர் ஒன்று வர இருப்பதாக தெரிவித்து காஞ்சியிலேயே இருக்குமாறு தெரிவித்தார் பெருமாள். திருப்பதியிலிருந்து சங்கு-சக்கரம் அனுப்பி வைத்தார். போரில் வென்றான் சக்ரவர்த்தி. பின்னர் அவனை பழைய சீவரம் போகுமாறு பணித்தார். சயனக் கோலத்தில் இருந்த பெருமாள், தொண்டைமான் சக்ரவர்த்திக்கு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதித்தார். உணர்ச்சி வசப்பட்ட மன்னன் "அப்பா வெங்கடேசா" என்று கூவினான். அந்த பெயரே இன்றளவும் நிலைத்து விட்டது என்பர். திருமாலை குறிக்க சங்கு, சக்கரம் கொண்டும், சிவபெருமானை குறிக்க ஜடாமுடி கொண்டும், பிரம்மனைக் குறிக்க முன் கையில் தாமரை மலர் கொண்டும் திருமூக்கூடல் வெங்கடேசர் மும்மூர்த்திகளின் ஐக்கிய கோலத்தில் தரிசனம் தருகின்றார். காணும் பொங்கலன்று காஞ்சி வரதராஜப் பெருமாளின் பார்வேட்டை உற்சவம் பிரசித்தம். காஞ்சிபுரத்திலிருந்து பழைய சீவரம் வந்த வரதராஜருடன் சீவரப்பெருமாளான நரசிம்மரும் சேர்ந்து கொண்டு திருமுக்கூடல் வந்து மூன்று பெருமாள்களும் சேவார்த்திகளுக்கு சேவை சாதிக்கின்றனர். சாலவாக்கம் ஸ்ரீநிவாசப் பெருமாள், காவந்த கண்டம் பெருமாள், பொற்பந்தல் வெங்கடேசர், மலைவையாபுரம் பெருமாள் அனைவரும் (தை மாதம்) மாட்டுப் பொங்கல் பெருவிழாவன்று இங்கு கூடுகின்றனர்.
மூலவர்: அப்பன் வெங்கடேசன், உற்சவர்: ஸ்ரீ நிவாசன், தாயார்: வைகுந்தவல்லி. மூலஸ்தானத்தின் மூலவராக அப்பன் வெங்கடேசன் எழுந்தருளியுள்ளார். வடக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஒன்பதடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. சுதைச்சிற்பம் என்பதால் மூலவருக்கு திருமஞ்சனம் கிடையாது. தைல சாத்துபடி மட்டுமே. மூலவருக்கு வலது புறமாக பூமாதேவியும், இடது புறமாக மார்க்கண்டேயரும் காணப்படுகின்றனர். ப்ருகு மகரிஷிக்கு ப்ரத்யட்சமானதாக ஐதீகம். உற்சவப் பெருமாள் ஸ்ரீ நிவாசர் மற்றும் உற்சவத் தாயார் அலர்மேல் மங்கை, வைகுந்தவல்லித் தாயார் ஆகியோரை சேவிக்கலாம். கருமாணிக்கப் பெருமாள், வீர ஹனுமான் ஆகிய மூர்த்தங்கள் தனி சந்நிதி கொண்டுள்ளனர். சிம்ம தூண்களைக் கொண்ட மண்டபம், படிக்கட்டுகளின் பக்கசுவரில் யாழி, தூண்களில் காணப்படும் கர்ண குண்டல ஆஞ்சநேயர் ஆகிய சிற்பங்கள் அருமையான வேலைப்பாடுகளுக்கு சான்று.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.