அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மஸ்வாமி திருக்கோயில் (பழைய சீவரம்)
God Name : ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவாரூர்
Call : +91-
ஸ்தல வரலாறு: பழைய சீவர மலை எனப்படும் பத்மகிரிக்கு ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து கச்சியிலிருக்கும் தேவாதிராஜனுக்கு கிரீடாசலமாக கருடனால் கொண்டு வரப்பட்டது. அத்ரி மகரிஷிக்கு நித்ய கல்யாண கோலத்தில் லட்சுமியோடு நரசிம்மர் காட்சியளித்ததாக ஐதீகம். முன்பு வரதர் இருந்த மண்டபம் மலை மேலுள்ளது. இங்கிருந்த வரதரை காஞ்சி வரதராஜர் கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மேற்கே திருமுகமண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில், ஆஜானுபாகு திருமேனியாக சேவை சாதிக்கின்றார். தனது இடது தொடையில் மஹாலட்சுமியை இருத்தி, தரிசனம் தருகின்றார். ஸ்ரீ அஹோபிலவல்லித் தாயார் தனிக்கோவில் நாச்சியாராக மஹாமண்டபத்தில் எழுந்தருளி உள்ளார். பறக்க எத்தனிக்கும் நிலையில் கருடாழ்வாரின் அபூர்வ கோலமும் உற்சவ மூர்த்தங்களும் அழகாக உள்ளன. ஸ்ரீ நிகமாந்த தேசிகர், ஆண்டாள், வாகன மண்டபத்தில் ஆஞ்சநேயர் ஆகியோரை தரிசிக்கலாம். கண்ணாடி அறையில் ஸ்வாமியைப் பார்க்கும்போது, நாற்புறமும் முழுக்கோவிலையும் காணமுடிகின்றது. 140 படிகள் மேலேறி வரதராஜ மண்டபம் போக வேண்டும். பொங்கல் தினம் இரவு 10 மணிக்கு பார் வேட்டை கிளம்பும் கச்சி வரதர் (காஞ்சி) பழைய சீவரம் வந்து வன போஜனம் விழா முடித்து, 140 படிகள் ஏறி (பத்ம கிரி குன்று) வந்த சேவை சாதிக்கின்றார். மறு நாள் பகல் 12 மணி அளவில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சந்நிதியை அடைகிறார். மலை உற்சவம், தோட்ட உற்சவம், நடவாவி உற்சவம் ஆகியன சிறப்புற நடத்தப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.