தேவாசுர யுத்தத்தில் அசுரர்களை தாமே வென்றதாக கர்வம் கொண்டு, இறுமாந்து இருந்த சமயம், சிவ பெருமான் ஒரு யட்சன் உருவில் அவர்கள் எதிரில் ஒரு துரும்பை நட்டு, இதை அழிப்பவனே பலசாலி என அவர்களின் பலத்தை சோதனை செய்து, பின் அவர்களின் கர்வத்தை அடக்குகிறார். பின்னர் இந்திராதி தேவர்கள் திரிதசேசர் எனும் லிங்கத்தை அமைத்து வழிபட்டனர் என ஸ்தல வரலாறு.
மூலவர்: அமரேஸ்வரர், அம்பாள்: அபிராமசுந்தரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் அமரேஸ்வரர். மூலவரின் பின்புறமாக சோமாஸ்கந்தரின் அழகிய வடிவம் காணலாம். இந்திரன் முதலான தேவர்கள் வழிபட்டதால் இத்தலம் அமரேஸ்வரம் எனப்பட்டது. அம்பாள் அபிராமசுந்தரி அழகு திருவுருவமாக தரிசனம் தருகின்றாள். சிவ லீலைகளில் ஒன்றான திரிபுராந்தக தாண்டவ சிற்பங்களும், கோஷ்டத்தின் வடக்கு சுவரில் காணப்படும் - அசுரனை அடக்கும் துர்க்கையின் சிற்பங்களும் எழிலானவை.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.