அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவில் (சேண்பாக்கம்)

God Name : செல்வ விநாயகர்

திருக்கழுக்குன்றம் கோவில்

செங்கல்பட்டு

Call : +91-

துக்கோஜி எனும் மராட்டிய மந்திரி, தனது சாரட் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, இவ்வூரை கடந்து செல்கையில், வண்டியின் அச்சு முறிந்து, வண்டி நின்று விட்டது. இறங்கி பார்த்ததில், வண்டி சக்கரத்தில் ரத்தம் காணப்பட்டது. பதறிப்போய் அந்த இடத்தை தோண்டி பார்த்தார். மூல விநாயகரும் மற்ற 11 விநாயகர்களும் கிடைத்தனர். அந்த விக்ரஹங்களை வெளிக் கொணர்ந்து, பிரதிஷ்டை செய்து, இவ்வாலயம் எழுப்பியதாக ஸ்தல வரலாறு. இவ்வூருக்கு மேற்கே உள்ள விரிஞ்சிபுரத்திற்கு விஜயம் செய்த ஆதிசங்கரர், தனது ஞான திருஷ்டியால் இங்கிருக்கும் சுயம்பு விநாயகர்களைப் பற்றி தெரிந்து கொண்டு, இவ்விநாயகர்களை வழிபட்டார். சக்கர ஸ்தாபனமும் செய்துள்ளார். விநாயகர்கள் சுயம்புவாக தோன்றிய ஸ்தலம் என்பதால் ஸ்வயம்பாக்கம் எனப் பெயருற்று பின்னர் மருவி சேண்பாக்கம் என அழைக்கப்படுகிறது. முன்நாளில் செண்பகக்காடாக இருந்ததால் செண்பகவனம் எனப் பெயர் கொண்டு நாளடைவில் சேண்பாக்கம் என்றானதாக கூறப்படுவதுமுண்டு.
மூலஸ்தானத்தில் செல்வ விநாயகர் லிங்க வடிவத்தில் எழுந்தருளியுள்ளார். இந்த திருமேனி வளர்ந்து கொண்டே இருக்கிறதாம். இவரின் முதுகில் வண்டி ஏறிய தடயம் (வடு) காணலாம். இவர் சுயம்பு மூர்த்தம். இவரை சுற்றிலும் 11 பிள்ளையார்கள் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளனர். (ஏகாதச கணபதிகள்) 1. பால விநாயகர், 2. நடன விநாயகர், 3. ஓம்கார விநாயகர், 4. கற்பக விநாயகர், 5. சிந்தாமணி விநாயகர், 6. செல்வ விநாயகர், 7. மயூர விநாயகர், 8. மூஷிக விநாயகர், 9. வல்லப விநாயகர், 10. சித்தி-புத்தி விநாயகர், 11. பஞ்சமுக விநாயகர். இந்த 11 விநாயகர்களும் சுயம்பு மூர்த்தங்கள் - ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளனர். பால விநாயகர் தண்ணீரில் மூழ்கியபடியே இருப்பாராம். விசேஷ நாட்களில் பாலில் மூழ்கி இருப்பார். இவருக்கு பால் அபிஷேகம் செய்வதாய் பிரார்த்தித்துக் கொண்டு பால் அபிஷேகம் செய்தால் நோய்கள் குணமாகும். ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். பகவான் மூலவரை பார்த்தபடி எழுந்தருளியுள்ளார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.