அருள்மிகு கௌதமேஸ்வரர் திருக்கோவில் (காரை)
God Name : கௌதமேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
ராமநாதபுரம்
Call : +91-
சிவபெருமான்-பார்வதி தேவியின் திருமணக் காட்சியைக் காண காஞ்சிபுரம் வந்த ரிஷிகளும், முனிவர்களும் தத்தம் நித்ய பூஜா அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க அமைதியான இடம் தேடினார்கள். காஞ்சிபுரத்தில் கூட்டமாக இருந்ததால், சற்றுத் தள்ளி வந்து இத்தலத்தில் அமர்ந்து வழிபாடுகளை நடத்தினர் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ஆறு ரிஷிகள் வெவ்வேறு இடங்களில் தங்கி பூஜைகளை மேற்கொண்டனர். இந்த ஆறு இடங்களை உள்ளடக்கிய வனப் பகுதிகளுக்கு, ஷடாரண்யம் எனப் பெயர். தமிழில் ஆற்காடு என்பர். ஷடாரண்ய க்ஷேத்ரங்கள்: வன்னிவேடு - அகஸ்தீஸ்வரர் - அகஸ்தியர், குடிமல்லூர் - அத்ரீஸ்வரர் - அத்ரி மகரிஷி, நாவ்லாக் - காஸ்யபேஸ்வரர் - காஸ்யபர், காரை - கௌதமேஸ்வரர் - கௌதமர், வேப்பூர் - வசிஷ்டேஸ்வரர் - வசிஷ்டர், மேல் விஷாரம் - வால்மீகீஸ்வரர் - வால்மீகி, புதுப்பாடி - பரத்வாஜீஸ்வரர் - பரத்வாஜர். சப்தரிஷிகள் ஸ்தாபித்து வழிபட்ட இந்த ஏழு சிவலிங்க மூர்த்தங்களையும், இந்த ஏழு ஸ்தலங்களுக்கும் சென்று, ஒரே நாளில் தொடர்ச்சியாக, சிவராத்திரி அன்று தரிசிப்பது புண்ணியமாகும். பாலாற்றின் வடகரையில் நான்கும், தென்கரையில் மூன்றும் உள்ளன.
மூலவர்: கௌதமேஸ்வரர், அம்பாள்: கிருபாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள்பாலிப்பவர் கௌதமேஸ்வரர். சப்தரிஷிகளுள் ஒருவரான கௌதம ரிஷி அகலிகையுடன் சேர்ந்து வழிபட்டதால் இறைவனுக்கு கௌதமேஸ்வரர் என்று பெயர். தெற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார் அன்னை கிருபாம்பிகை. சுவாமிக்கு செய்யப்படும் பிரதோஷ அபிஷேக தீர்த்தம் நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகின்றது. இங்குள்ள சிந்தாமணி விநாயகர் மிகவும் வரப்பிரசாதியானவர் என்பர். கௌதம ரிஷியின் திருவுருவம் காணப்படவில்லை. சிறிய ஆலயமானாலும் மேன்மையாக உள்ளது. வைத்ய கௌதமேஸ்வரராக இருப்பதால் இங்கு பிரசாதமாக சுக்கு-மிளகு-திப்பிலி சூர்ணம் தருகின்றனர். (இவ்வூரின் அருகாமையிலுள்ள நல்லாத்தோப்பு எனும் இடத்தினருகே உள்ள சிவாலயத்தில் உலகளந்த நாயகி சகித நந்தீஸ்வரரை தரிசிக்கலாம்.)
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.