அருள்மிகு அத்ரீஸ்வரர் திருக்கோவில் (குடிமல்லூர்)

God Name : ஸ்ரீ அத்ரீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

செங்கல்பட்டு

Call : +91-

சிவபெருமான்-பார்வதி தேவியின் திருமணக் காட்சியை காண காஞ்சிபுரம் வந்த ரிஷிகளும், முனிவர்களும் தத்தம் நித்ய பூஜா அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க அமைதியான இடம் தேடினார்கள். காஞ்சிபுரத்தில் கூட்டமாக இருந்ததால், சற்றுத் தள்ளி வந்து இத்தலத்தில் அமர்ந்து வழிபாடுகளை நடத்தினர் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ஆறு ரிஷிகள் வெவ்வேறு இடங்களில் தங்கி பூஜைகளை மேற்கொண்டனர். இந்த ஆறு இடங்களை உள்ளடக்கிய வனப் பகுதிகளுக்கு ஷடாரண்யம் எனப் பெயர். தமிழில் ஆற்காடு என்பர். ஷடாரண்ய க்ஷேத்ரங்கள்: வன்னிவேடு - அகஸ்தீஸ்வரர் - அகஸ்தியர், குடிமல்லூர் - அத்ரீஸ்வரர் - அத்ரி மகரிஷி, நாவ்லாக் - காஸ்யபேஸ்வரர் - காஸ்யபர், காரை - கௌதமேஸ்வரர் - கௌதமர், வேப்பூர் - வசிஷ்டேஸ்வரர் - வசிஷ்டர், மேல் விஷாரம் - வால்மீகீஸ்வரர் - வால்மீகி, புதுப்பாடி - பரத்வாஜீஸ்வரர் - பரத்வாஜர். சப்தரிஷிகள் ஸ்தாபித்து வழிபட்ட இந்த ஏழு சிவலிங்க மூர்த்தங்களையும், இந்த ஏழு ஸ்தலங்களுக்கும் சென்று, ஒரே நாளில் தொடர்ச்சியாக, சிவராத்திரி அன்று தரிசிப்பது புண்யமாகும். பாலாற்றின் வடகரையில் நான்கும், தென்கரையில் மூன்றும் உள்ளன. இவைகளே ஷடாரண்ய க்ஷேத்ரங்கள் எனப்படும்.
மூலவர்: ஸ்ரீ அத்ரீஸ்வரர், அம்பாள்: திரிபுரசுந்தரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ அத்ரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். மூலஸ்தானத்திற்குள் நமச்சிவாய எந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட பீடம் இருக்கின்றது. சப்த ரிஷிகளுள் அத்ரி முனிவர் வழிபட்ட லிங்கம் என்பதால் அத்ரீஸ்வரர் எனப் பெயர் கொண்டார். பாலாற்றிலிருந்து வந்த சிவலிங்கம் என்பதால் வந்தீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அந்திமக் காலத்தில் உழல்வோர்க்கு துணையாக நின்று அருள்பாலிப்பதால் அந்தீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் திரிபுரசுந்தரி எழுந்தருளி அருள்புரிகின்றாள். அர்த்த மண்டப வாசலருகே கூப்பிய கைகளுடன் அத்ரி மகரிஷி அமர்ந்துள்ளார். வேறெங்கும் கண்டிருக்க முடியாத சிற்பமாக - லிங்கோத்பவர் சிற்பம் விளங்குகிறது. மத்தியில் சிவபெருமான் நிற்க, மேலே அன்னப்பட்சி வடிவில் பிரம்மன், கீழே வராஹ வடிவில் திருமால் - வலப்புறத்தில் பிரம்மனும், இடப்புறத்தில் திருமாலும், சிவபெருமானை வணங்கும் நிலையில் காட்சி தரும் அற்புதமான சிற்பம். விநாயகர், வள்ளி - தெய்வயானை உடனாய முருகன், கால பைரவர் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். குறிப்பு: இவ்வூரின் மற்றொரு ஆலயமாக ஸ்ரீ பூமி ஈஸ்வரர் ஆலயத்தை தரிசிக்கலாம். வாஸ்து சாஸ்திர பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. சோழர்கள் நிர்மாணித்த கலைநயம் மிக்க பிரம்மாண்டமான ஆலயங்களுள் இதுவும் ஒன்று.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.