அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோவில் (தக்கோலம்)

God Name : ஜலநாதீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

தட்ச பிரஜாபதி இங்கு யாக குண்டம் நிறுவி பெரிய யாகம் ஒன்றைச் செய்தான். சிவபெருமானை அழைக்கவுமில்லை, அவருக்குச் சேர வேண்டிய அவிர்பாகமும் தரவில்லை. இதை எடுத்துச் சொல்ல வந்த பார்வதியையும் அவமானப்படுத்திவிட்டான். தன்னை அவமதித்த தட்சனுக்குப் புத்தி புகட்ட, தன்னுடைய உக்ர அம்சமான வீரபத்ரரை அனுப்பி வைத்தார் ஈஸ்வரன். ரௌத்ராகாரமாக வந்த வீரபத்ரனைப் பார்த்து தட்சன் (தக்கன்) ஓலமிட்டதால், இவ்வூர் தக்கோலம் எனப் பெயர் கொண்டதாகக் கூறப்படுகிறது. நந்தியின் வாயில் இருந்து எப்போதும் நீர் சுரந்து கொண்டே இருப்பதால் இவ்வூருக்கு திருஊறல் எனப் பெயர் வந்தது. பிரம்மா, விஷ்ணு மற்றும் பார்வதி தவக்கோலம் பூண்ட இடம் தக்கோலம். ராஷ்டிரகூடப் படைகளுக்கும் சோழப் படைகளுக்கும் போர் நடந்த இடம் தக்கோலம். (கி.பி 949). தேவாரத் திருத்தலம்.
மூலவர்: ஜலநாதீஸ்வரர், அம்பாள்: கிரிராஜ கன்னிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஜலநாதீஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். கூர்மையான லிங்க பாணம். பாணத்தில் இரண்டு பள்ளங்கள் காணப்படும். தாழ இருக்கும் ஆவுடையார். தீண்டாத் திருமேனி. மூலவர்க்குப் பின்னால் பார்வதி - பரமேஸ்வர திருமணக் கோலம் காணலாம். உத்தராயணத்திலும், தட்சிணாயனத்திலும் நிறம் மாறும் லிங்க மூர்த்தம். உதித முனிவர் பூஜித்த உதித லிங்கம். இவருக்கு ஊறல்நாதர், உமாபதீஸ்வரர் என்றெல்லாம் திருநாமங்கள் உண்டு. அம்பாள் கிரிராஜ கன்னிகை நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். வடக்கு பார்த்த சந்நிதி. அம்பாளை வழிபட்டுப் பின்னர் மூலவரை தரிசிப்பது சம்ப்ரதாயமாக உள்ளது. சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. ஆலங்காட்டுக்காளி, சுக்ரவார அம்மன் ஆகிய மூர்த்தங்கள் அவசியம் பார்க்கவேண்டியவை. வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் சாந்த தட்சிணாமூர்த்தி. வட்ட வடிவமான ஜடாமுடியும், இடக்காதில் காதணியாக உடுக்கையும் கொண்டும், வலக்கால் கீழூன்றியும், இடக்கால் மடித்தும், உத்கடி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். சனகாதி முனிவர்கள் இருக்கும் இடத்தில் மானும், நாகமும் உள்ளன. இடுப்பில் அணிந்துள்ள துணியின் முடிச்சுகள் அழகாக இருக்கின்றன. மீண்டும் மீண்டும் பார்க்க ஆசையைத் தூண்டும் அழகான திருவுருவம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.