அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோவில் (எலுமியன் கோட்டூர்)
God Name : தெய்வநாயகேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
திரிபுர சம்ஹாரத்தின் போது இறைவன் தேரில் வரும் வேகத்தில், அவர் அணிந்திருந்த கொன்றை மலர் விழுந்த இடமே இலம்பையங்கோட்டூர். இங்குள்ள மல்லிகை வனத்தில் எட்டு கன்னிகைகள் ரம்பையோடு சேர்ந்து இவ்விறைவனை வழிபடுகின்றனர்.
என்றைக்கும் மாறாத இளமை வேண்டுமென ரம்பை பிரார்த்தித்து கொண்டாள். மாறாத இளமை என்பது உடலா, ஞானமா? எனக் கேட்டதற்கு ஞானம் என்று பதிலளித்தாள் எனக் கூறப்படுகிறது.
திருஞானசம்பந்தர் இக்கோவிலைத் தேடி அலைந்தபோது சிறுவனாகவும், வயோதிக வடிவத்திலும், பசு வடிவத்திலும் வந்து அழைத்தாராம்.
காஞ்சி மஹா பெரியவர் இங்கு சில காலம் தங்கி இவ்விறைவனை வழிபட்டு அம்பாளின் பாதத்தில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்தார் எனக் கூறுவர். வேதப் பாடசாலை ஒன்றும் நடத்துகின்றனர்.
தேவாரத் திருத்தலம்.
மூலவர்: தெய்வநாயகேஸ்வரர், அம்பாள்: கனககுஜாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி தரிசனம் தருகின்றார் தெய்வநாயகேஸ்வரர். சுயம்பு லிங்கம்.
மிகப் பெரிய ஆவுடையார் கொண்ட அழகிய லிங்க மூர்த்தம். தீண்டாத்திருமேனி.
தேவ கன்னிகை ரம்பை பூஜித்ததால் அரம்பேஸ்வரர் என்றொரு திருநாமமும் உண்டு. ஏப்ரல் மாதத்தில் நான்கு நாட்களும், செப்டம்பர் மாதத்தில் ஏழு நாட்களும் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து பூஜை செய்கின்றன.
அம்பாள் கனககுஜாம்பிகை தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகின்றாள். ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்துள்ளனர். அம்பாளுக்கு கோடேந்து முலையம்மை, தாயினும் நல்லாள் ஆகிய திருநாமங்களும் உண்டு.
நுழைவாசலின் அருகே தேவகன்னியர்கள் பூஜித்த லிங்கம் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி தரிசனம் தருகின்றார். ஷோடசலிங்கம் என்பர்.
இங்குள்ள யோகதட்சிணாமூர்த்தி அரம்பையர்களுக்கு ஞானத்தை போதிப்பதாக உள்ளது. சின்முத்திரையை நெஞ்சுக்கருகே வைத்து காட்சி தருகின்றார். மிகவும் அழகான திருவுருவம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.