அருள்மிகு மணிகண்டேஸ்வரர் திருக்கோவில் (திருமால்பூர்)
God Name : ஸ்ரீ மணிகண்டேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
திருமால் பக்தனான குபன் எனும் அரசன் ததீசி முனிவரிடம் போர் புரிந்து தோற்றுப் போனான். திருமாலை வேண்டி அவருடைய சக்ராயுதம் பெற்று மீண்டும் போருக்குப் போய் சக்ராயுதத்தை முனிவர் மீது ஏவினான். வஜ்ர தேகமுடைய ததீசியின் மீது பட்டதால் சக்ராயுதம் மழுங்கியது.
திருவிற்குடியில் ஜலந்தாசுரனை வதம் செய்ய சிவபெருமான் உண்டாக்கிய சக்கரத்தை அவரிடமிருந்து கேட்டுப் பெற வேண்டி, திருமால் கோவிந்தவாடி எனும் ஸ்தலம் வந்து சிவதீட்சை பெற்று, இத்தலம் வந்தமர்ந்து தவம் மேற்கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
1008 சிவநாமங்களைக் கூறிக் கொண்டே, 1008 செந்தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்கிறார் திருமால். அவ்வாறு அர்ச்சனை செய்து கொண்டிருக்கும்போது, மலர்களில் ஒன்றை காணாமல் செய்து விடுகிறார் சிவபெருமான். மலர் ஒன்று குறைவதால், தனது விழியை பெயர்த்து எடுத்து அர்ச்சனையை தொடர்கிறார் திருமால்.
இதனால் மகிழ்ந்த சிவபெருமான் சிவந்த திருமேனியோடு ஜோதி வடிவாய் ப்ரத்யட்சம் ஆனார்.
தாமரை போன்ற விழியைப் பெயர்த்து எடுத்து அர்ச்சனை செய்ததால் 'பதுமாட்சகன்' என்ற பெயரை வழங்கி, இழந்த விழியை தந்து, இத்தலத்தில் தரிசித்தவர்களுக்கு முக்தியளிக்கவும் வரங்களை தந்த சிவபெருமான், சக்கரத்தை திருவீழிமிழலையில் தருவதாக கூறி மறைந்தார் என ஸ்தல வரலாறு.
திருமால் பேறு பெற்ற காரணத்தினால் 'திருமால்பேறு' என்றும், ஹரி சக்கரம் வேண்டி தவம் இருந்ததால் 'ஹரிசக்ரபுரம்' எனவும் பெயர் கொண்டது இவ்வூர். தற்போது இதன் பெயர் திருமால்பூர்.
உமையவள் விருதக்ஷீர நதிக்கரையில் மணலால் பிடித்து அமைத்த லிங்க வடிவமே இத்தலத்தின் மூலவர் என ஸ்தல வரலாறு.
விபூதி, குங்குமத்துடன் துளசி தீர்த்தம், சடாரி சாற்றலும் உண்டு.
இது ஒரு தேவாரத் திருத்தலம்.
மூலவர்: ஸ்ரீ மணிகண்டேஸ்வரர், அம்பாள்: அஞ்சனாட்சி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ மணிகண்டேஸ்வரர். 'மால் வணங்கீஸ்வரர்' என்ற திருநாமமும் உண்டு. அம்பாள் பிடித்து வைத்த மணல் லிங்கம். ஆவுடையார் கல்லினால் செய்யப்பட்டது. லிங்கம் செந்நிறத்தில் காணப்படுகிறது.
திருமேனிக்கு புனுகு சட்டம் மட்டுமே சாத்துகின்றனர். செப்புக்குவளை ஒன்றை லிங்கத்தில் வைத்து, ஆவுடையார்க்கு மட்டுமே அபிஷேகம் செய்வார்கள். 'தீண்டாத்திருமேனி' என்பர்.
அம்பாள் அஞ்சனாட்சி அழகு திருவுருவமாக நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். பாசம், அங்குசம், அபய-வரத முத்திரைகள் கொண்ட சதுர்புஜங்களுடன் காட்சி தருகின்றாள். மேரு, அஷ்டலட்சுமிகள், எட்டு நாகங்கள், எட்டு சிங்கங்கள், எட்டு யானைகள் கொண்ட பஞ்சாம்ச பீடத்தில் நிற்கின்றாள்.
திருமால் கை கூப்பி வணங்கிய நிலையில் உள்ளார்.
மூலவர் சந்நிதியின் இடப்புறமாக வல்லபை விநாயகர் பத்துக் கரங்களுடன் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். வல்லபையை தனது தொடையில் இருத்தி இருக்கின்றார். வலப்புறமாக ஆறுமுகரை தரிசிக்கலாம்.
சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக உள்ளன. திருமாலின் உற்சவ விக்ரஹம் - ஒரு கையில் விழியும் மறு கையில் தாமரையும் கொண்டு காட்சி தருவது பார்க்க அழகாக உள்ளது. பாலகணபதி, உச்சிஷ்ட கணபதி திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன.
அஷ்டபுஜ துர்க்கை மற்றும் இதர உற்சவ மூர்த்தங்கள் அவசியம் காண வேண்டியவை. விசேஷ மூர்த்தியாக நந்தியம்பெருமான் எங்கும் பார்த்திராத வகையில் மானுட உடலுடனும், மான், மழு ஏந்திய மேற்கரங்களும் கொண்டும், கூப்பிய கரங்களுடனும் தரிசனம் தருகின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.