அருள்மிகு ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் திருக்கோவில், மாங்காடு
God Name : ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மார்க்கண்டேயரின் வேண்டுகோளுக்கிணங்க இங்கு கோவில் கொண்டதாகக் கூறுவர்.
மார்கழி மாதத்தில் தினமும் ஆண்டாளின் திருப்பாவைகளைப் பாடி, பெருமாளை வழிபட்டு வருவது சிறந்தது.
மூலவர்: ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்் தாயார்: ஸ்ரீ கனகவல்லி.
மூலஸ்தானத்தில், மூலவராக ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சேஷ வாகனத்தில் அல்லாது சிம்ம வாகனத்தில் வீற்றிருப்பது வித்தியாசமான ஒன்று. வலது கரத்தில் தங்கை காமாட்சிக்கு சீர் வரிசையாக கொண்டு வந்த மோதிரத்தை வைத்துள்ளார். இடது கரத்தில் பிரயோக சக்கரம்.
பெருமாளின் திருவடிகளின் கீழ் மார்க்கண்டேயரும், நேர் எதிரே பெரிய திருவடியும் உள்ளனர். ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். தேவிகள் இருவரும் நாணத்தால் தலை சாய்த்து மணப்பெண் போல் காணப்படுகின்றனர். இங்கு மகாலட்சுமி கனகவல்லித் தாயாராக கமலாசனத்தில் தரிசனம் தருகின்றாள். பார்க்க பரவசமூட்டும் அழகு திருவுருவம்.
தனித்தனி சந்நிதிகளில் ஆண்டாள், பக்த ஆஞ்சநேயர் மூர்த்தங்களை சேவிக்கலாம்.
பிரதான வாசலுக்கு முன்பாக அவிரட்சகன், அக்னி மூர்த்தி இருவரும் துவார பாலகர்களாக உள்ளனர். மூன்று கால்களுடன் அக்னி மூர்த்தி காணப்படுகின்றார். கோசாலை ஒன்றும் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.