அருள்மிகு குமார சுப்ரமண்யஸ்வாமி திருக்கோவில் (ஓதிமலை)
God Name : முருகப் பெருமான்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
ஆணவமாக இருந்த பிரம்மாவிடம், படைப்பிற்கு ஆதாரம் எது என முருகப் பெருமான் கேட்க, ஓம் எனும் அட்சரம் என பதில் கூறினார் பிரம்மா. ஓம் எனும் பிரணவத்திற்கு விளக்கம் கூறுமாறு முருகன் கேட்க விளக்கம் கூற முடியாமல் நின்ற பிரம்மனை இரும்பு அறையில் அடைத்தார் முருகன். இரும்பு அறை என்பதே இவ்வூரின் பெயராக இரும்பறை என்றானது. சிறையிலிருந்த பிரம்மாவை மீட்க கைலாசநாதர் வந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. கயிலையிலிருந்து புறப்பட்டு வந்ததால், அம்பாள் இல்லாமல், வேத ஆகமங்களின் பொருளை முருகன் மலை மீது இருந்து ஓதியதால் ஓதியமலை எனப் பெயர் கொண்டு நாளடைவில் ஓதிமலை என்றானது.
குமரக்கடவுள் குடி கொண்ட குன்றுகளுள் மிகவும் உயரமாகவும், செங்குத்தாகவும் உள்ள குன்று. 1880 படிகள் கடந்து ஏறிச் செல்ல வேண்டும். மலை உச்சி நுழைவு வாயிலருகே விநாயகப் பெருமான் எழுந்தருளி ஆசி வழங்குகிறார். மூலஸ்தானத்தில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். ஐந்து திருமுகங்களும், எட்டுத் திருக்கரங்களும் கொண்டு கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். குழந்தை முகம் - அதிகார தோரணையில் காணப்படும் முருகன். கத்தி, அம்பு, வஜ்ராயுதம், கேடயம், வில், பாசம் ஆகிய ஆயுதங்களை கொண்ட கரங்களும், அபய வரத முத்திரைகள் கொண்ட கரங்களுமாக அஷ்டபுஜங்கள் கொண்ட அழகிய திருமேனி. ஒரு காலை சற்று முன்னே எடுத்து வைத்துள்ளதை காணலாம். சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் - சிவபெருமானும் முருகனும் வெவ்வேறு வடிவங்கள் அல்ல என்பதைக் காட்ட ஐந்து முகங்களை செய்துள்ளார் சிற்பி. இதனை குமாரசிவம் என்பார்கள். இந்திர மயில் இடதுபுறமாக திரும்பி உள்ளது. இது ஒரு திருகுபீடம் ஆகும். தரையோடு தரையாக இருப்பதை திருகுபீடம் என்பர். வெள்ளரளி, செவ்வரளி வைத்து பூக்கேட்டல் பிரார்த்தனை செய்கின்றனர். வலதுபுறம் மலர் விழுந்து ஆசி வழங்குதல் சிறப்பாகும். வடகிழக்கே 1 கி.மீ தொலைவில் பூதிக்காடு என்றழைக்கப்படும் விபூதிக்காடு உள்ளது. போகர் சித்தர் யாகம் செய்த இந்த இடத்தில் உள்ள மண் வெண்மை நிறமாக உள்ளது. இதையே விபூதிக்காடு என்கின்றனர். பக்தர்களுக்கு இதை பிரசாதமாகத் தருகின்றனர். மலையில் கடைகள் கிடையாது. அர்ச்சனை பொருட்கள் வாங்கிச் செல்ல வேண்டும். தண்ணீர் வசதி கிடையாது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.