சுவாமி தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமம் (ஆனைகட்டி)
God Name : நர்மதேஸ்வரா
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
ரிஷிகேசத்திலிருக்கும் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமத்தின் கிளையாக 1990ல் தொடங்கிய இந்த ஆனைகட்டி ஆஸ்ரமத்தில் வேதாந்தம் மற்றும் சமஸ்கிருதம் கற்றுத் தருகின்றனர். யோகா மற்றும் தியானம் செய்யவும் கற்றுத் தருகின்றனர். பகவத் கீதை, உபநிஷத்துகள் போன்றவைகளை கற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். டிஜிட்டல் நூலகத்தில் பல நூல்களை பாதுகாத்து வைத்துள்ளனர். அர்ஷ வித்யா குருகுலம் உள்ளது. கோசாலையும் உள்ளது. பழங்குடி மக்களுக்கு பலவிதமான உதவிகளைச் செய்கின்றனர். இங்கு கற்றுக் கொள்ள வருபவர்களின் வசதிக்காக தங்கும் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். முன்கூட்டியே தெரிவித்து முன்பதிவு செய்ய - (0422) 2657001, 94426 46701 (வரவேற்பு). ஸ்ரீ சாயிராம் - மேலாளர் - 94426 46702.
ஆஸ்ரமத்திலுள்ள கோவிலில் கணேசர், தட்சிணாமூர்த்தி, நர்மதேஸ்வரா, ஞானேஸ்வரி ஆகிய தெய்வங்களை எழுந்தருளச் செய்துள்ளனர். சிறிய குன்று போன்ற அமைப்பில் தனியாக ஸ்ரீ கல்யாண சுப்ரமண்யர் எழுந்தருளி காட்சி தருகிறார். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு ருத்ர திரிசதி அர்ச்சனையும், லட்சார்ச்சனையும் செய்கின்றனர். பிரதோஷ வழிபாடுகள் சிறப்புற நடைபெறுகின்றன. சஷ்டி மற்றும் கிருத்திகை தினங்களில் கல்யாண சுப்ரமண்யருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஸ்கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.