அருள்மிகு ஸ்ரீ சுக்ரீஸ்வரர் திருக்கோவில் (எஸ்.பெரியபாளையம் - திருப்பூர்)

God Name : மூலவர்: ஸ்ரீ சுக்ரீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

விருதுநகர்

Call : +91-

கிருத யுகத்தில் காமதேனுவாலும், திரேதா யுகத்தில் சுக்ரீவனாலும், துவாபர யுகத்தில் ஐராவதத்தாலும், கலியுகத்தில் தேவர்களாலும் வழிபடப்பட்டு பூஜிக்கப்பட்ட இறைவன். ராவண சம்ஹாரத்தின்போது கொண்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க சுக்ரீவன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் என்பதால் 'சுக்ரீஸ்வரர்' என்ற திருநாமம் கொண்டார். இக்கோவிலைச் சேர்ந்த நந்திப் பசுமாடு ஒரு தோட்டத்தில் பயிர்களை மேய்ந்து கொண்டிருந்ததாம். கோபம் கொண்ட தோட்டக்காரர் பசுவின் காதுகளை அறுத்து விட்டாராம். மறுநாள் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நந்திக்குக் காது அறுபட்டு கிடப்பது கண்டு வேதனையடைந்து, புதிய நந்தி ஒன்றை பிரதிஷ்டை செய்ய முற்பட்டனர். பழைய நந்தி இடம் தராததால் இரண்டையுமே வைத்து வழிபடுவதாக கூறப்படுகிறது. மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இவ்வூர் வழி வந்த வியாபாரி ஒருவனை வழிமறித்த இடையன் ஒருவன், "மூட்டைகளில் என்ன?" என வினவினான். மூட்டைகளில் பயறு இருப்பதாக பொய் கூறினான் வியாபாரி. இடையன் வடிவில் வந்த இறைவன் அவனது பொய்யை உண்மையாக்கி மூட்டைகளில் பயறு இருக்கும்படி செய்து விட்டார். செய்த தவற்றிற்கு வருந்திய வியாபாரி தன்னை மன்னிக்குமாறு இறைவனை வேண்டி மீண்டும் மிளகு மூட்டைகளைக் பெற்றான் என்பது ஸ்தல வரலாறு.
மூலவர்: ஸ்ரீ சுக்ரீஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ சுக்ரீஸ்வரர். கம்பீரமான தோற்றம் கொண்ட தேஜோமய லிங்கம். கல்வெட்டுக்கள் இவரை 'குரகுத்தளி ஆளுடைய நாயனார்' என்று குறிப்பிடுகின்றன. இவருக்கு 'குரகுத்தளி நாயனார்', 'மிளகீஸ்வரர்' ஆகிய பெயர்களும் உண்டு. பெரிய சதுர ஆவுடையாரையும் பெரிய பாணத்தையும் கொண்ட அழகான திருமேனி. சதுர்யுகங்கள் கண்ட திருமேனி. கிழக்கு பார்த்த சந்நிதி. நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யும்போது எவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் உறிஞ்சிக் கொள்ளும் லிங்க பாணத்தைக் கொண்டுள்ளதால், அக்னி ஸ்வரூபம் என்பார்கள். தட்சிணாயணம் - உத்திராயணம் இணையும் நேரத்தில் சூரியனின் பொற்கரணங்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. ஸ்வாமிக்கு வலப்பக்கமாக தனி சந்நிதி கொண்டு எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை. 'ஆவுடைநாயகி' என்ற திருநாமமும் உண்டு. ஸ்வாமி சந்நிதிக்கு எதிரே நந்தி இருப்பது போலவே இங்கும் நந்தி காணப்படுகிறது. ஸ்தல விநாயகராக கன்னிமூல கணபதி எழுந்தருளி ஆசி வழங்குகிறார். மூலவர் அக்னி லிங்கமாக இருக்க, ப்ருத்வி - வாயு - தேயு லிங்கங்கள் வலச்சுற்றில் இடம் பெற்றிருக்க, வில்வ மரத்தடியில் ஆகாசலிங்கம் காட்சி தர பஞ்ச லிங்க தரிசனம் கிடைக்கின்றது. மூலவரை பார்த்தபடி நிற்கும் நந்திப் பெருமானுக்கு இரண்டு காதுகளும் இல்லை. இரட்டை நந்திகளை தரிசிக்கலாம். பிரகாரச் சுவரில் சுக்ரீவனும், ஐராவதமும் சிவலிங்கத்தை பூஜை செய்யும் காட்சி புடைப்புச் சிற்பமாக உள்ளது. வாயுலிங்கம், குபேரலிங்கம், துர்க்கை, கால பைரவர், பத்ரகாளி, சூரியன் ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம். திருவாதிரையின்போது மிளகு சாத்தப்படுகிறது. தேவார வைப்புத்தலம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.