அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் / நீர்வண்ணப் பெருமாள் திருக்கோவில் (திருநீர்மலை)

God Name : (மலைக்கு மேல்) ஸ்ரீ ரங்கநாதர், திரிவிக்ரமன், சாந்த நரசிம்மர்் (அடிவாரம்) நீர்வண்ணப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவாரூர்

Call : +91-

புனித க்ஷேத்திரங்கள் பலவற்றிற்குமாகப் போய்க்கொண்டிருந்த திருமங்கை ஆழ்வார், இத்தலத்திற்கு வந்தபோது பெருமழை பெய்ததால் மலையைச் சுற்றிலும் நீர் (வெள்ளம்) சூழ்ந்தது. பெருமாளை சேவிக்காமல் திரும்பிச் செல்ல மனமில்லாமல், அருகேயுள்ள மந்திரகிரி எனும் குன்றின் மீது ஏறிச் சென்றடைந்து காத்திருந்தார். நீண்ட காலம் காத்திருந்த பிறகு நீர் வடியலாயிற்று. நீர் சூழ்ந்த மலை என்பதால் திருநீர்மலை எனப் பெயருற்றது. தோயகிரி க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது (தோய என்றால் நீர்). வெள்ளம் வடிந்ததும் மலை ஏறத் தொடங்கிய ஆழ்வார், இங்கு காத்திருந்த நாட்களில் - நான்கு ஊர்களுக்குப் போய் விதவிதமான கோலங்களில் பெருமாளை சேவித்திருப்பேனே என எண்ணிய வண்ணம் நடக்கலானார். ஆழ்வாரது வருத்தத்தைப் போக்கும் விதத்தில், நான்கு வித திருக்கோலங்களில் சேவை சாதித்தாராம் பெருமாள். நான்கு ஸ்தலங்களுக்குச் சென்று நான்கு வித பெருமாள்களை சேவித்த பயனை, இந்த ஒரே ஸ்தலத்தில் வழங்கினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. 'நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தாற்கிடம் மாமலையாவது நீர்மலையே' எனும் ஆழ்வாரின் கூற்றுப்படி, நான்கு வகை திருக்கோலங்களில் சேவை சாதிக்கும் பெருமாளை நாம் சேவித்து மகிழ்கிறோம். இத்தலத்தில் வால்மீகி மகரிஷிக்கு - ஸ்ரீ ராமராக சேவை சாதித்துள்ளார் ரங்கநாதர். லட்சுமி தாயார் இங்கு சீதா தேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும், சங்கு - சக்கரம் பரத - சத்ருக்கனாகவும், கருடன் அனுமனாகவும், விஸ்வகர்மா சுக்ரிவனாகவும் காட்சி தந்துள்ளனர். இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மலை மீதுள்ள கோவில்: அழகிய படிக்கட்டுக்கள் மீது ஏறி மலை மேல் உள்ள கோவிலுக்குச் செல்கின்றனர். துவக்கத்திலுள்ள ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு மலை ஏறுகின்றனர். மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ரங்கநாதர் பாம்பணை மீது சயனக் கோலம் கொண்டுள்ளார். மாணிக்க சயனம் என்பர். வலது கரம் மீது சிரசை வைத்தும், இடது கரம் தொங்கவிட்டும், மற்றைய கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், ரங்க விமானத்தின் கீழ் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். நாபியில் பிரம்மாவும், திருவடிகளருகே ஸ்ரீதேவி, பூதேவி தேவியர்களும் மற்றும் பிருகு - மார்க்கண்டேய முனிவர்களும் காணப்படுகின்றனர். உற்சவரான போக ரங்கர் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். உற்சவ மூர்த்திகளாக சக்கரத்தாழ்வாரும், உற்சவ தாயாரான ரங்கநாயகியும் சேவை சாதிக்கின்றனர். தனிக் கோவில் நாச்சியாராக ரங்கநாயகித் தாயார் மூலவராக சேவை சாதிக்கின்றார். மிகுந்த வரப்பிரசாதி என்பர். வலச்சுற்று வரும்போது, தோயகிரி விமானத்தின் கீழ், உலகளந்த பெருமாளைக் காணலாம். நடந்த கோலத்தில் சேவை சாதிக்கும் திரிவிக்ரமனை சேவிக்கலாம். இடது திருவடியைத் தூக்கி விண்ணை அளந்ததை நடந்தான் என்ற நிலைக்கு ஒப்பிடுகின்றனர். உற்சவ மூர்த்தியான திரிவிக்ரமன் ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்களுடன் சேவை சாதிக்கின்றார். அடுத்து நாம் சேவிப்பது சாந்த நரசிம்மரை - சாந்த விமானத்தின் கீழ் வீற்றிருந்தக் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அஸ்வ மேத யாகம் செய்ய வந்த அர்ஜுணனுக்கு பிரத்யட்சமானதாக ஐதிகம். உற்சவரான பிரஹ்லாத வரதன் அழகே உருவாகக் காட்சி தருகின்றார். மலைக் கோவிலின் கோபுர நுழைவாசல் முன்பாக கல்கி மண்டபத்தை சேவார்த்திகள் இளைப்பாற கட்டியுள்ளனர். எம்.எஸ். சுப்புலட்சுமி - சதாசிவம் தம்பதியினர் கட்டிக் கொடுத்துள்ளதாக ஆலயத்து தொடர்புடையவர்கள் கூறினர். மலை அடிவாரக் கோவில்: மூலஸ்தானத்தில் மூலவராக நீர் வண்ணப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஆறடி உயரம் கொண்ட அழகான ஆஜானுபாகு திருமேனி. சாளக்ராம மாலை அணிந்தும், கிரீடம் தரித்தும் காணப்படுகின்றார். சங்கு - சக்கரம் ஏந்தியுள்ளார். வலப்பக்கமாக வால்மீகி மகரிஷி இடம் பெற்று சாட்சி தருகிறார். பிருகு முனிவர் மற்றும் மார்க்கண்டேயருக்கு பிரத்யட்சமானதாக ஐதீகம். உற்சவரான நீலமுகில் வண்ணன் ஸ்ரீதேவி பூதேவி சகிதம் சேவை சாதிக்கின்றார். தனிக் கோவில் நாச்சியாராக தாயார் அணி மாமலர் மங்கை அழகே உருவாக அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கும் கோலத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். தாமரை மலர்கள் கொண்ட பின் கரங்களும், அபய - வரதம் கொண்ட முன் கரங்களும் கொண்டு காட்சி தருகின்றார். உற்சவத் தாயார் அழகாக இருக்கின்றார். சீதா தேவியையும், லக்ஷ்மணனையும் உடன் கொண்டு ஸ்ரீ கோதண்ட ராமர் சேவை சாதிக்கின்றார். வால்மீகி மகரிஷிக்கு பிரத்யட்சமானதாக ஐதீகம். ஆழ்வார்களையும், ராமாநுஜர், மணவாள மாமுனிகள், பெரிய திருவடி ஆகியோரை சேவிக்கலாம். அருகே நீராழி மண்டபத்துடன் கூடிய திருக்குளம் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.