அருள்மிகு ஆண்டளக்கும் அய்யன் திருக்கோவில் (திரு ஆதனூர்)
God Name : மூலவர்: ஆண்டளக்கும் அய்யன்் உற்சவர்: ரங்கநாதன் (அழகிய மணவாளன்)
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
ஆணவத்தால் செருக்குற்ற காமதேனு பசுவின் கர்வத்தை அடக்கி அருள் புரிந்த ஸ்தலம் இது. காமதேனு எனும் பசு இங்கு பெருமாளை வழிபட்டு பேறு பெற்றதால், இவ்வூர் (ஆ - பசு, தன் - ஊர்) ஆதனூர் என அழைக்கப்படுகிறது. ஆதன் எனும் குறுநில மன்னன் இவ்வாலயத்தை நிர்மாணித்ததால் இந்தப் பெயர் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு.
இது ஆதி ரங்கேஸ்வரம், பார்கவ க்ஷேத்ரம் எனப் போற்றப்படும் ஸ்தலம். ப்ருகு, அக்னி, காமதேனு ஆகிய மூவருக்கும் அச்சத்திலிருந்து விடுதலை அளித்தார் எம்பெருமான் என்றும், அக்னி சாப விமோசனம் பெற்றார் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அரங்கனுக்கு ஆலய மதில் கட்டியதால், செல்வத்தை எல்லாம் இழந்து விட்டேன் என வருத்தமுற்றான் திருமங்கை மன்னன். அவனது கனவில் தோன்றிய பெருமாள் திரு ஆதனூர் வரும்படி பணித்தார். திருஆதனூரில் திருமங்கை மன்னனுக்கு ஒரு வியாபாரி எதிர்பட்டான். அவன் கையில் காலியான மரக்கால் ஒன்று இருந்தது. அந்த மரக்காலை திருமங்கை மன்னனிடம் தந்து, உனது இஷ்ட தெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறி வழிபட்டு விட்டு, இந்த மரக்காலில் மண்ணை அளந்தாலும் பொன்னாக மாறும் என்றான் வியாபாரி. ஆனால் கோரிக்கையில் நியாயமான உண்மை இருக்க வேண்டும். இல்லை என்றால் மண் பொன்னாகாது என்றும் கூறினான். அவ்வாறே நடந்தது. இந்த அதிசய வியாபாரி யார் எனத் தெரிந்து கொள்ள முயன்ற போது, மரக்காலுடன் ஸ்வாமி கோவில் கொண்டு சேவை சாதித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இதனால் ஆண்டளக்கும் அய்யன் என்ற திருநாமத்தைப் பெற்றார்.
சென்ற காலம், நிகழ் காலம், எதிர் காலம் எனும் மூன்று காலங்களை அளப்பவரும் நிர்வகிப்பவரும் ஆண்டளக்கும் அய்யனே. தொண்டர்களுக்கு அளித்த கணக்கை எழுதி முடித்துவிட்டு, இன்னும் யாராவது வருகிறார்களா என திரும்பிப் பார்த்த இடம் திரும்பூர். ஓலையில் கணக்கை எழுதிய இடம் ஓலையூர் எனக் கூறுகிறது ஸ்தல புராணம்.
இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: ஆண்டளக்கும் அய்யன்் உற்சவர்: ரங்கநாதன் (அழகிய மணவாளன்).
தாயார்: ரங்கநாயகி எனப்படும் கமலாசினி் உற்சவத் தாயார்: ரங்கநாயகி.
மூலஸ்தானத்தில் ஏழு தலை ஆதிசேஷன் மீது புஜங்க சயனராய் பள்ளி கொண்டுள்ளார் ஆண்டளக்கும் அய்யன். இவர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டுள்ளார். திருமுகத்தருகே ஒரு மரக்கால் இடம் பெற்றுள்ளது. கையில் ஓலையும் எழுத்தாணியும் கொண்டுள்ளார். திருவடிகளருகே ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் காணப்படுகின்றனர். காமதேனுவும், திருமங்கை ஆழ்வாரும் இடம் பெற்றுள்ளனர்.
பெருமாளின் திருவடிகளருகே அக்னி பகவானின் திருவுருவம் உள்ளது. ஸ்வாபி - ஸ்வதா எனும் இரண்டு தலைகள், ஏழு நாக்குகள், அபய ஹஸ்தம், ஸ்வஸ்தி ஹஸ்த முத்திரை, கொடி, சாமரம் ஆகியன கொண்ட சதுர்புஜங்கள், ஆகவணீயம் - தக்ஷிணாக்னி - கார்ஹபத்யம் எனப்படுகின்ற மூன்று கால்கள் இவற்றுடன் கூடிய திருமேனியுடன் காணப்படுகிறார். இவருக்கு ஒரு மண்டலம் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் சகல தோஷங்களும் நீங்கும்.
உற்சவரான அழகிய மணவாளன் எனப்படும் ரங்கநாதர் பேரெழில் கொண்ட திருவுருவம். சங்கு - சக்கரம் ஏந்திய மேற்கரங்களுடனும், வலது கீழ்க் கரம் அபய ஹஸ்தமாகவும், இடது கரத்தில் கதாயுதத்தைப் பற்றியும் நின்ற திருக் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். யோக நரசிம்மர், ஆஞ்சநேயர், சந்தானகிருஷ்ணன் மற்றும் ஆண்டாள் ஆகியோரின் உற்சவ மூர்த்திகளை சேவிக்கலாம்.
தனி சந்நிதியில் தாயார் ரங்கநாயகி அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். கமலாசினி, பார்கவி ஆகிய திருநாமங்களும் உண்டு.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.