அருள்மிகு கல்யாண ரங்கநாதர் திருக்கோவில் (திருநகரி)

God Name : மூலவர்: வேதராஜன், உற்சவர்: கல்யாண ரங்கநாதர்.

திருக்கழுக்குன்றம் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

பிரம்மாவின் புத்திரனான கர்த்தம ப்ரஜாபதி, மோட்சம் கிடைக்க வேண்டி, இத்தலத்தில் திருமாலைக் குறித்து தவம் மேற்கொண்டார். திருமால் அருள் புரிவதில் தாமதம் காட்டினார். இதனால் கோபம் கொண்ட திருமகள், பக்தன் மீது கொண்ட பரிவால், வைகுண்டத்தை விடுத்து, இத்தலத்திற்கு வந்து இங்குள்ள பொய்கையின் தாமரை மலரில் தன்னை மறைத்துக் கொண்டாள். திருமகளைத் தேடி பூலோகம் வந்த திருமால், இங்குள்ள பொய்கையிலுள்ள எல்லாத் தாமரைகளும் மொட்டுகளாக இருக்கக் கண்டார். தனது வலது கண்ணை மூடி இடது கண்ணை திறந்தார். சந்திரோதயம் என நினைத்து மலர்கள் மலர்ந்தன. ஒரே ஒரு தாமரை மட்டும் மொட்டாகவே இருந்தது. அதற்குள் ஒளிந்திருந்த லக்ஷ்மியைக் கண்டுபிடித்து, ஸ்ரீயை ஆலிங்கனம் செய்து கொண்டார் திருமால் என ஸ்தல வரலாறு. திருமங்கை ஆழ்வாரின் அவதார ஸ்தலம். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று - திருநாங்கூர் பஞ்ச நரசிம்ம ஸ்தலங்களுள் ஒன்று. (திருவாலி - திருநகரி ஆகிய இரண்டு ஸ்தலங்களும் இரட்டை திருப்பதிகள் - ஒரே திவ்ய தேசமாக பாடப்பட்டுள்ளது).
மூலவர்: வேதராஜன், உற்சவர்: கல்யாண ரங்கநாதர், தாயார்: அம்ருதவல்லி. மூலஸ்தானத்தில், வயலாளி மணவாளனே வேதராஜன் என்ற திருநாமத்துடன், வீற்றிருந்த கோலத்தில், மேற்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார். சந்நிதியில் யோக நரசிம்மரையும், விமானத்தில் ஹிரண்ய நரசிம்மரையும் சேவிக்கலாம். இரண்டு வித நரசிம்மர்கள் சேவை சாதிப்பதால், இரு வேறு நரசிம்ம க்ஷேத்ரங்களாக கூறுகின்றனர். நர்த்தனக் கண்ணனும் தனி சந்நிதி கொண்டுள்ளார். உற்சவ மூர்த்தியான கல்யாண ரங்கநாதர் பேரெழிலுடன் காட்சி தருகின்றார். சங்கு - சக்கரமேந்திய மேற்கரங்களுடனும், அபய ஹஸ்தம் கொண்ட வலது கீழ்க்கரத்துடனும் சதுர்புஜதாரியாக சேவை சாதிக்கின்றார். திருமங்கை மன்னன் - திருமணங் கொல்லை வழிப் பாதையில் நின்றிருந்தபோது அவருக்கு கல்யாண கோலத்தில் காட்சி தந்த அதே நிலையில் இங்கு சேவை சாதிக்கின்றார். திருமங்கை ஆழ்வார் சந்நிதியில், ஆழ்வார் ஒரு வேடன் வடிவில் தரிசனம் தருகின்றார். பக்கத்தில் ஆழ்வார் ஆராதித்த சிந்தனைக்கினியான் எனும் சிறிய மூர்த்தமும் இருக்கின்றது. தனிக் கோவில் நாச்சியாராக, அம்ருதவல்லித் தாயார் அமர்ந்த திருக்கோலத்தில் மூலவராகவும், உற்சவராகவும் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கின்றார். தனி சந்நிதியில் கோதை நாச்சியார் மூலவராகவும், உற்சவராகவும் காட்சி தருகிறார். ஆழ்வாராதிகளையும், ராமாநுஜர், மணவாள மாமுனி ஆகியோரையும் சேவிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.