அருள்மிகு செங்கண்மால் திருக்கோவில் (திருத்தெற்றியம்பலம்)
God Name : மூலவர்: செங்கண்மால், உற்சவர்: லட்சுமி ரங்கன்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
பூமியை தூக்கிக் கொண்டு போய் பாதாளத்தில் ஒளித்து வைத்த இரண்யாட்சகனை சம்ஹாரம் செய்து, பூமியை மீட்டு வந்த பெருமாள், போர் புரிந்ததனால் சிவந்த கண்களை பெற்றிருந்த காரணத்தால் செங்கண்மால் எனும் திருநாமம் கொண்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. போர் புரிந்த களைப்பை போக்கிக் கொள்ள இத்தலத்தில் பள்ளி கொண்ட பெருமாளாக இருப்பதாக கூறப்படுகிறது.
அனந்தாழ்வானுக்கும், நாச்சியாருக்கும் பிரத்யட்சமான பெருமாள், தன்னை தரிசிப்பவர்களுக்கு, அரசாளும் வல்லமை தந்து அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேற வரமும் அளிப்பவர் என்று திருமங்கை ஆழ்வார் தனது பாசுரத்தில் விளக்கியுள்ளார்.
மூலவர் ரங்கநாதராகவே வழிபடப்படுகிறார். ஸ்ரீரங்க ரங்கநாதருக்கு ஒப்பானவர் என்று போற்றப்படுகிறார்.
11 திவ்ய தேச ஸ்தலங்கள் தோன்றிய வரலாறு:
சிவபெருமானை - யாகத்திற்கு அழைக்காமலும், யாகத்தின் அவிர்பாகத்தை தராமலும், அவமானப்படுத்தி தட்சன் செய்யும் யாகத்திற்கு அழைப்பின்றி போனாள் பார்வதி. எவ்வளவு அறிவுரைகள் கூறியும், காதில் வாங்கிக் கொள்ளாமல் செருக்குடன், யாகத்தை தொடர்ந்து நடத்தினான் தட்சன். யாகத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், யாக குண்டத்தில் குதித்து, தன் ஸ்தூல உடலை அழித்துக் கொண்டாள் பார்வதி.
நடந்தவை அனைத்தையும் அறிந்து கொண்ட சிவபெருமான் ஆவேசம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். உக்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கையில், அவரது ஜடாமுடி தரையில் பட்டு, அதிலிருந்து ஒரு சிவன் தோன்றி, ருத்ர தாண்டவம் ஆடினார். இவ்வாறாக மூலசிவனின் ஜடாமுடி தரையில் படும் போதெல்லாம் ஒரு சிவன் தோன்றி ருத்ர தாண்டவம் ஆட, முடிவாக 11 ருத்ரமூர்த்திகள் ஆடிக் கொண்டிருந்தனர்.
11 சிவ வடிவங்கள் கோபாவேசமாக ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தால் உலகிற்கு அழிவு என கலக்கமுற்று பயந்த முனிவர்கள், திருமாலை சரண் அடைந்தனர். திருமாலும் 11 வித வடிவங்களில் தோன்றி, 11 சிவ தாண்டவர்கள் முன் நின்று, அவர்களை சாந்தப்படுத்தினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சினம் தணிந்த சிவபெருமான், ஒவ்வொரு வடிவத்தையும் - ஒருவருக்குள் ஒருவராக செலுத்தி, இறுதியில் ஒரே வடிவமாக நின்றார். தன்னைப் போலவே ஏகாதச வடிவங்கள் கொண்டு திருமாலும் எழுந்தருள வேண்டுமென சிவன் கோரியதால், இத்தலத்தில் 11 பெருமாள்களாக திருமால் சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஸ்ரீ வண்புருஷோத்தமம், ஸ்ரீ வைகுந்த விண்ணகரம், திருத்தெற்றியம்பலம், திரு அரிமேய விண்ணகரம் ஆகிய திவ்ய தேசங்களில் மணவாள மாமுனிகள் மங்களாசாஸன உற்சவத்திற்கு எழுந்தருளுகிறார்.
மூலவர்: செங்கண்மால், உற்சவர்: லட்சுமிரங்கர், தாயார்: செங்கமலவல்லி.
மூலஸ்தானத்தில் செங்கண்மால், மூலவராக - புஜங்க சயன கோலத்தில், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார். ஆதிசேஷன் மீது தெற்குப்புறமாக சிரசையும், வலது கையையும் மரக்கால் மீது வைத்தபடி சயனித்தும், இடது கை இடுப்பின் மீது வைத்தபடி கீழே தொங்கவிட்டு சேவை சாதிக்கும் இவரது தலைப்பக்கமாக ஸ்ரீ தேவியும், திருவடிகளருகே பூதேவியும் அமர்ந்துள்ளனர்.
உற்சவர் லட்சுமிரங்கர் பேரெழில் கொண்ட விக்ரகம். மேற்கரங்களில் சங்கு - சக்கரம் ஏந்தி, வலது கீழ்க்கரத்தை அபய ஹஸ்தமாக கொண்டும், இடது கீழ்க்கரத்தில் கதாயுதம் பற்றியும் சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி கொண்டு சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
அமர்ந்த திருக்கோலத்தில் தாயார் செங்கமலவல்லி மூலவராகவும், உற்சவராகவும் தனி சந்நிதி கொண்டுள்ளார். லட்சுமி நாராயணன், சந்தான கோபாலன், சக்கரத்தாழ்வார், ஹனுமன், ஆழ்வார்கள் ஆகியோரை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.