அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் (குலசேகரப்பட்டினம்)

God Name : ஞானமூர்த்தீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

கிருஷ்ணகிரி

Call : +91-

சுயம்புவாக தோன்றியுள்ள முத்தாரம்மனை - தனது உருவத்தை தானே தீர்மானம் செய்து கொண்டவள் என போற்றி வழிபடுகின்றனர். மகிஷாசூரனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, ஸ்வாமியை தனது வலப் பக்கமாக வைத்து அன்னை பராசக்தி வழிபடுவதாக ஐதீகம். இவ்வூர் பூசாரியின் கனவில் தோன்றிய அம்மன், மயிலாடி எனும் ஊருக்கு சென்று அங்குள்ள சுப்பையா சிற்பியை பார் என தெரிவித்தாளாம். சுப்பையா சிற்பியின் கனவில் தோன்றிய அம்மன், தென் திசை நோக்கி சென்றால் காணப்படும் ஆண்பாறை/பெண்பாறை கற்களிலிருந்து எங்கள் வடிவங்களை வடித்து குலசையிலிருந்து வரும் பூசாரியிடம் கொடுக்கவும் என தெரிவித்ததாக ஸ்தல வரலாறு. முத்துக்களை மலை போல குவித்து பாண்டியர்கள் வழிபட்டதாலும், முத்துக்களை போல உள்ள ஆமணக்கு விதைகளை காணிக்கையாக சமர்ப்பிப்பதாலும் முத்தாரம்மன் என்று அழைக்கின்றனர். முத்து - ஆற்று - அம்மன் - முத்துக்களை போல வரும் அம்மை வடுக்களை ஆற்றி குணமாக்குவதால் முத்தாரம்மன் எனப் பெயர் வந்தது. 41 நாள் விரதமிருந்து காப்பு கட்ட வரும் பக்தர்களுக்காக, அம்மன் சந்நிதியில் முத்துப் போட்டு பார்த்து ஒவ்வொரு பக்தரும் என்ன வேஷம் போட வேண்டும் என பூசாரிகள் தெரிவிப்பார்கள். அதன்படி வேடமணிந்த பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்பார்கள். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் தசரா விழாவை சிறப்பாக கொண்டாடுகின்றனர். நவராத்திரி ஒன்பது நாட்களும் தசரா தர்பார் சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளுவது கண் கொள்ளாக் காட்சி.
மூலஸ்தானத்தில் ஞானமூர்த்தீஸ்வரர் சகிதமாக முத்தாரம்மன் சிவசக்தி ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். சிரசிலுள்ள ஞானமுடி - இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவற்றை குறிப்பதாகும். கண்களில் கண் மலர்களுடனும், கழுத்தில் தாலிப்பொட்டு, மூக்கில் புல்லாக்கு - மூக்குத்தி ஆகியன அணிந்தும், வட திசை நோக்கி காட்சி தரும் முத்தாரம்மன் அழகே உருவாக தரிசனம் தருகின்றாள். உடுக்கை, திரிசூலம், நாகபாசம், திருநீற்றுக் கொப்பரை ஆகியன ஏந்திய நான்கு திருக்கரங்கள். திருநீற்றுக் கொப்பரையில் - நந்தி, நாகம், சிவலிங்கம், திரிசூலம் ஆகியன பொறிக்கப்பட்டுள்ளன. செங்கோலும், விபூதிக் கொப்பரையும் ஏந்தி காட்சி தருகின்றார் ஞானமூர்த்தீஸ்வரர். சுயம்பு வடிவமான மூலவர்களோடு அழகிய உற்சவ மூர்த்திகளும் காணப்படுகின்றனர். ஒரே பீடத்தில் அம்மனும் ஸ்வாமியும் வடக்கு பார்த்து எழுந்தருளி அருள் பாலிப்பது கூடுதல் விசேஷம் என்பர். மகா வல்லப கணபதி, பேச்சியம்மன், கருப்பசாமி, பைரவர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.