அருள்மிகு ஸ்ரீ முத்துமாலையம்மன் திருக்கோவில் (குரங்கணி)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
கிருஷ்ணகிரி
Call : +91-
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாலையம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். சுற்றுவட்டார மக்களின் குலதெய்வமாக விளங்குகிறாள். இடதுபுறமாக ஸ்ரீதேவி - பூதேவி சகித நாராயணன் எழுந்தருளி அருள்புரிகின்றார். முப்பிடாதி அம்மன், சப்த கன்னிகைகள், பார்வதி, உஜ்ஜயினி மாகாளி, பேச்சியம்மன், பிரம்ம சக்தி, மாரியம்மன், சந்தன மாரியம்மன், பைரவர், வீரபத்ரர், விநாயகர், விசாலாட்சி உடனாய விஸ்வநாதர், துர்க்கை, பனையடியான் பீடம் மற்றும் பரிவார தேவதைகளை தரிசிக்கலாம். சீதா தேவியை ராவணன் கவர்ந்து சென்றபோது, தனது முத்துமாலையை கழற்றி வீசினாள் என்றும், அதையே பூஜிக்கின்றனர் என்றும் வரலாறு கூறுகிறது. சீதா தேவியை தேடி வர ஸ்ரீ ராமபிரானின் உத்தரவுப்படி வானரப்படைகள் இங்கிருந்துதான் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இவ்வூருக்கு குரங்கணி எனப் பெயர் வந்ததாம். மாவிளக்கு பிரார்த்தனை பிரசித்தம். சுடலைமாடன் கோவிலொன்றும் இவ்வூரில் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.