அருள்மிகு ஆதிநாதப் பெருமாள் திருக்கோவில் (ஆழ்வார் திருநகரி)

God Name : மூலவர்: ஸ்ரீ ஆதிநாதன், உற்சவர்: பொலிந்து நின்ற பிரான்

திருக்கழுக்குன்றம் கோவில்

கிருஷ்ணகிரி

Call : +91-

காரியார் - உடைய நங்கை தம்பதியினருக்கு குழந்தைப்பேறு இல்லாததால், புத்ர பாக்யம் நல்குமாறு எம்பெருமானை வேண்டினார்கள். தானே குமாரனாகப் பிறக்கப் போவதாக எம்பெருமான் தெரிவித்தார். பிறந்த குழந்தைக்கு சடகோபன் எனப் பெயரிட்டனர். சடம் என்ற வாயுவை ஒட்டிப் பிறந்ததால் இந்தப் பெயர் வந்தது. இவரே பின்னாளில் நம்மாழ்வார் என அழைக்கப்பட்டார். திருவரங்கனின் அபிமானமாக கருதப்பட்டதால் நம்மாழ்வார் என்ற திருநாமம். பொலிந்து நின்ற பிரான் சூடிய மகிழ மாலையை விரும்பி அணிபவராதலால் வகுளாபரணர் எனப் பெயர் கொண்டார். பிறந்தது முதல் குழந்தைகளுக்குரிய இயல்புகள் ஏதுமின்றி மாறுபட்டிருந்ததால் மாறன் எனப் பெயரிட்டு உற்சவ மூர்த்தியின் முன்பாக விட்டனர். குழந்தை அருகிலிருந்த புளிய மரத்து பொந்தில் புகுந்து கொண்டது. கண் விழித்துப் பார்த்தல், பேசுதல் ஏதுமின்றி 16 ஆண்டுகள் யோக நிலையிலிருந்தது. திருக்கோளூரை சேர்ந்த மதுரகவி ஆழ்வார், ஒரு ஒளியின் வழிகாட்டுதலில் இப்புளிய மரத்தை அடைந்து குழந்தையைக் கண்டார். 'செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்?' என சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்டார். (அதாவது உயிரில்லாத உடம்பில் ஆத்மா புகுந்து, எதனை அனுபவித்து எங்கே இருக்கும் என்ற வினா) 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்' என பதிலளித்தார் சடகோபன். (அதாவது அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப - துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும் என்று பொருள்) குழந்தையின் ஞானத்தை தெரிந்து கொண்டு குருவாகவும், தெய்வமாகவும் ஏற்றுக் கொண்டார் மதுரகவி ஆழ்வார். குருகு எனும் சொல் நாரை - கோழி போன்ற பட்சிகளைக் குறிப்பதாகும். அதனால் பட்சியின் பெயரால் இந்த ஸ்தலம் விளங்குவதாகக் கூறப்படுகிறது. குருகன் என்ற அரசன் ஆட்சி புரிந்த ஸ்தலம் என்பதாலும் இந்தப் பெயர் வந்ததாகக் கூறுவர். குருகு எனப்படும் சங்கு பெருமாளை வழிபட்டதால் இந்தப் பெயர் வந்திருக்கக் கூடும் என்ற கருத்தும் உள்ளது. பிரம்மாவிற்கு குருவாக இருந்து உபதேசம் செய்த ஸ்ரீமந் நாராயணன், இத்தலத்தில் குருவாக இருப்பதால் குருகூர் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். ஆதிசேஷனே உறங்காப்புளியாக வாழும் இடமாதலால் க்ஷேம க்ஷேத்திரமாக என்று கூறுவார்கள். மணவாள மாமுனியின் அவதார ஸ்தலம். பூமி பிராட்டியுடன் வராஹ அவதாரக் காட்சியை காட்டியருளிய ஸ்தலம். இந்திரன் தன் மாதா - பிதாவை உபசரிக்காததால் சபிக்கப்பட்டு, பின்னர் எம்பெருமானை வழிபட்டு நற்கதியடைந்த ஸ்தலம். லட்சுமி தேவி பெருமாளை அடைய வேண்டி பிரார்த்திக்க, எம்பெருமான் பிரம்மசார்ய கோலத்தில் இருந்ததால், லட்சுமியை மகிழ மலர் மாலையாக மாற்றி மார்பில் தரித்துக் கொண்டதாக ஐதீகம். ஆதி க்ஷேத்திரம், வராஹ க்ஷேத்திரம், தீர்த்த க்ஷேத்திரம், தாந்த க்ஷேத்திரம், சேஷ க்ஷேத்திரம் என்றெல்லாம் போற்றுகின்றனர். திருக்குருகூரை 'பரம பதத்து எல்லை' என்று ஸ்ரீ ராமாநுஜர் கூறியிருக்கின்றார்.
மூலவர்: ஸ்ரீ ஆதிநாதன், உற்சவர்: பொலிந்து நின்ற பிரான். தாயார்கள்: (இரண்டு) ஆதிநாத நாயகி, திருக்குருகூர் நாயகி. மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ ஆதிநாதப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். அழகான சுயம்பு திருமேனி. மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாகக் கூறுகின்றனர். உபய நாச்சியார்கள் உடன் உள்ளனர். பிரம்மா, மதுரகவி ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோர்க்கு பிரத்யட்சமானதாக ஐதீகம். உற்சவரான பொலிந்து நின்ற பிரானின் திருவுருவம் பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் அழகை உடையது. பெருமாள் சந்நிதிக்கு பின்னால் இரண்டு தாயார்களும் சந்நிதி கொண்டுள்ளனர். ஆதிநாதவல்லித் தாயார் மற்றும் திருக்குருகூர் நாயகி இருவரும் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். பகல் பத்து, இராப் பத்து உற்சவங்கள் நடக்கும் மண்டபங்களும், நூற்றுக்கால் மண்டபமும் தாயார்கள் இருக்கும் பிரகாரத்திலேயே அமைந்துள்ளன. பழமையான கல் நாதஸ்வரம் காணலாம். பிரகாரத்தில் ஸ்ரீ ராமர், ஸ்ரீ வேணு கோபாலன், திருப்புளியாழ்வார், கருடாழ்வார், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ வராஹர், திருவெங்கடமுடையான் ஆகியோரை சேவிக்கலாம். நம்மாழ்வார் சந்நிதி பெருமாள் சந்நிதியிலிருந்து சற்றுத் தள்ளி அமைந்துள்ளது. ஆழ்வாரின் திருவுருவம் போற்றத்தக்க அழகுடன் வடிக்கப்பட்டுள்ளது. கிரீடம் போன்ற கொண்டை, திருமுகத்தில் காணப்படும் ஜோதி, அணிந்துள்ள மகிழ மாலை, ஞான முத்திரையுடன் கூடிய திருக்கரங்கள், தேஜஸான திருமேனி என அற்புதமான அழகுடன் காணப்படுகிறது. ஆழ்வார் காலத்திய புளியமரம் சந்நிதியில் இருக்கின்றது. அதற்கு ஏழு கிளைகள் உள்ளன. ஆழ்வார் இந்த மரத்தடியிலேயே புதைக்கப்பட்டார் என்றும், மதுரகவி ஆழ்வார் அவருக்கு அங்கேயே கோவில் எழுப்பினார் என்றும் கூறப்படுகிறது. ஆழ்வாரின் பிறந்த தினமான வைகாசி விசாகத்தை கடைசி நாளாகக் கொண்டு பத்து நாட்கள் விழா சிறப்புற நடைபெறுகிறது. ஐந்தாம் நாளன்று நவதிருப்பதிகளைச் சேர்ந்த எம்பெருமான்கள் கருட சேவையில் ஆழ்வார்க்கு சேவை சாதிக்கின்றனர். பங்குனி மாதம் பிரம்மோத்ஸவம் 10 நாட்கள் நடைபெறும். ஆழ்வார் பதினாறு ஆண்டுகள் பத்மாசனத்தில் எழுந்தருளியிருந்த புளியமரம் இதுவே. இந்த மரம் இரவில் உறங்குவதில்லை என்பதனால் உறங்காப்புளி என்று அழைக்கப்படுகிறது. இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று, நவ திருப்பதிகளுள் ஏழாவது, மற்றும் ஒரு குரு ஸ்தலம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.