அருள்மிகு கைலாஸநாதர் திருக்கோவில் (ஸ்ரீ வைகுண்டம்)
God Name : மூலவர்: ஸ்ரீ கைலாஸநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கிருஷ்ணகிரி
Call : +91-
உரோமச முனிவர் தமது குருவான அகஸ்திய பெருமானிடம், சிவ கடாட்சம் பெற்று முக்தியடைய வழி கேட்டார். அதற்கு அகஸ்தியர் நீ பொருணை ஆற்றின் கரை வழியாக சங்கு முகம் வரைக்கும் செல். உனக்கு வழி காட்ட ஆற்று நீரில் ஒன்பது மலர்களை விடுகிறேன். ஒவ்வொரு மலரும் எந்த இடத்தில் ஒதுங்குகிறதோ, அங்கெல்லாம் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபடு என்றார். (சங்கு முகம் என்பது பொருணை ஆறு கடலில் சங்கமிக்கும் இடம்)
அகஸ்தியர் கூறியபடியே உரோமச முனிவரும் ஒவ்வொரு பூ கரை ஒதுங்கிய இடங்களில் (ஆற்றின் இரு கரைகளிலும்) சிவலிங்கம் நிறுவி வழிபட்டார். ஆறாவது மலர் கரை ஒதுங்கிய இடம் ஸ்ரீ வைகுண்டம்.
ஒவ்வொருவர் ஜாதகத்திலும் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட கிரகங்களின் தசை ஆட்சி புரியும். ஒவ்வொரு தசைக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதி. ஒவ்வொரு தசையின்போதும் எந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் நற்பயன் பெறலாம் என விளக்க சிவபெருமான் அந்தந்த கிரகங்களாக இருந்து அருள்புரிவதாக ஐதீகம். அதன்படி இங்கு சனீஸ்வரரின் அம்சமாக இறைவன் அருள்புரிகின்றார்.
மூலவர்: ஸ்ரீ கைலாஸநாதர், அம்பாள்: சிவகாமி அம்மன்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் மூலவரான ஸ்ரீ கைலாஸநாதர். கிழக்கு பார்த்த சந்நிதி.
சனீஸ்வர பகவானின் அம்சமாக இங்கு கைலாஸநாதர் எழுந்தருளி அருள்புரிவதாக ஐதீகம்.
தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் சிவகாமி அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். கன்னி விநாயகர், முருகன், அதிகார நந்தி, அக்னிபுத்ரர், பஞ்ச லிங்கங்கள், பூதநாதர், 63 நாயன்மார்கள், நவகிரகங்கள், விசாலாட்சி உடனாய விஸ்வநாதர், வீரபத்ரர் ஆகிய மூர்த்திகளை தரிசிக்கலாம். உரோமச முனிவரின் திருவுருவம் காணலாம்.
சந்தன சபாபதி மண்டபத்து யாளித் தூண்களில் காணப்படும் சிற்பங்கள், கம்பீரமான அக்னி வீரபத்ரர், மற்றும் யாளியின் வாயில் உருளும் கல் உருண்டைகள் யாவும் காணுதற்கு அரியவை.
சந்தன சபாபதியின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. சிவகாமி அம்மனுக்கு நெல் பொறியும் பசும்பாலும் நைவேத்தியம் செய்து பிரார்த்திக்கின்றனர்.
கல்யாண மண்டபத்து விதானத்தில் மூலிகைகளால் வரையப்பட்ட நவ கயிலாய ஓவியங்கள் எழிலானவை. காவல் தெய்வமாக விளங்கும் பூதநாதர் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாகவும் விளங்குகிறார்.
குமரகுருபரர் பிறந்த ஊர். பேச்சு வராமலிருந்த குமரகுருபரருக்கு திருச்செந்தூர் முருகனருளால் பேசும் திறன் வந்தது. தனது காலத்தை இத்தலத்திலேயே கழித்தார் எனக் கூறப்படுகிறது.
நவ கயிலாயங்களில் ஒன்று (6) - சனீஸ்வர ஸ்தலம்
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.