அருள்மிகு கைலாஸநாதர் திருக்கோவில் (குன்னத்தூர் - திருவேங்கடநாதபுரம்)
God Name : மூலவர்: ஸ்ரீ கைலாஸநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
சிவதரிசனம் பெற்று முக்தியடைய விரும்பிய உரோமச முனிவரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய எண்ணிய அவரது குரு அகஸ்தியர், ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அந்த மலர்கள் எங்கெல்லாம் சென்று கரை ஒதுங்குகிறதோ, அங்கெல்லாம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு பணித்தார். அவ்வாறே ஒன்பது இடங்களில் ஒன்பது லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் உரோமச முனிவர். இவையே நவ கயிலாயங்கள்.
இவற்றுள் நான்காவது மலர் சென்று கரை ஒதுங்கிய இடமே குன்னத்தூர். நவகோள்கள் ஒவ்வொன்றும் நவ கயிலாயங்களில் ஆட்சி செலுத்துவதாக ஐதீகம். கிரகாதிபதிகள் ஆதிக்கம் செலுத்துவதால், இங்கு ராஹுவின் ஆதிக்கம் பெற்று கைலாஸநாதர் அருள் புரிகின்றார்.
மலைக்குன்று இருப்பதால் குன்றத்தூர் எனப் பெயருற்று பின்னர் மருவி குன்னத்தூர் என்று அழைக்கப்படலாயிற்று. பொருநையாறும் பச்சையாறும் சங்கமம் ஆவதால் செங்காணி என்பர். செம்மண் பொருந்திய நிலம் என்பதாலும் செங்காணி என்று கூறுவர்.
கோதாட்டுதல் என்றால் அறியாமல் செய்யும் பிழைகளை நீக்கி, பாபங்களைப் போக்குதல் என்று பொருள். இவைகளை மன்னித்து பொறுத்தருளுவதால், கோதை பரமேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ கைலாஸநாதர். பால் அபிஷேகம் செய்யும்போது மூலவரின் பாணத்தில் மெல்லிய வளைந்த கோடு ஊர்ந்து செல்வது தெரியும். இவருக்கு கோதை பரமேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. இவரை தென் காளத்தி நாதர் என்றும் போற்றுகின்றனர். சந்நிதி கிழக்கு பார்த்துள்ளது.
கோஷ்ட மூர்த்தங்கள் யாவும் அழகாக இருக்கின்றன.
பிரதோஷ நந்தி, தக்ஷிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், கைலாஸநாதர் ஆகிய திருவுருவங்களில் நாகர் வடிவம் காணப்படுகிறது.
கன்னி விநாயகர், ஆறுமுக நயினார், பைரவர் ஆகியோருக்கு சந்நிதிகள் இருக்கின்றன. ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் கொண்ட ஆறுமுகநயினார் மார்பில் நாகமுத்திரை காணப்படுகிறது. மயிலின் வாய் பாம்பை கவ்வியுள்ளது. சிலையின் எந்த பகுதியை தட்டினாலும் வெவ்வேறு ஓசைகள் எழும்பும். அற்புதமான விக்ரகம்.
ஆதியில் சந்நிதியை புற்று மூடியிருந்ததாம். எப்போதும் ஸ்வாமி மீது நல்ல பாம்பு ஒன்று படுத்திருக்குமாம். மணி அடித்தபடியேதான் அர்ச்சகர் கருவறைக்குள் நுழைவார் எனக் கூறப்படுகிறது.
நவ கயிலாயங்களில் ஒன்று - ராஹு ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.