அருள்மிகு லட்சுமி நாராயணர் மற்றும் காட்டு ராமர் திருக்கோவில் (திருநெல்வேலி)
God Name : ஸ்ரீ லட்சுமி நாராயணர், காட்டு ராமர், ராமலிங்கர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
சீதா பிராட்டியை அபகரித்துக் கொண்டு போக யத்தனித்த ராவணனோடு யுத்தம் புரிகிறான் ஜடாயு எனும் கழுகரசன். போரில் தனது இறக்கைகள் இரண்டையும் இழந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். இந்த நிகழ்வை ராமபிரானிடம் தெரிவிக்கும் வரையிலாவது தனது உயிர் இருக்க வேண்டும் என்பதற்காக ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தான். சீதையை காணாது, கானகத்தில் தேடி அலைந்து கொண்டிருந்த ராமனின் காதுகளில் ராமநாம ஜபம் விழுந்தது. நடந்தவற்றை ராமனிடம் கூறிவிட்டு உயிர் நீத்த ஜடாயு, சாகும் தறுவாயில் தனக்கு லட்சுமிநாராயணனாக காட்சி தருமாறு வேண்டினான். ஜடாயுவிற்கு லட்சுமிநாராயணக் கோலத்தில் சேவை சாதித்த ஸ்ரீ காட்டு ராமர், பின்னர் ஜடாயுவிற்கு நீர்க்கடன் செய்ய ஜடாயு தீர்த்தம் உருவாக்கினார். தர்ப்பணம் செய்த இடம் ஜடாயுத் துறை என வழங்கப்படுகிறது. ஜடாயுவிற்கு காட்சி கொடுத்த இடம் லட்சுமிநாராயண கோவிலாக உள்ளது. நீர்க்கடன் முடித்து இளைப்பாறிய இடம் காட்டு ராமர் கோவிலாக உள்ளது. தர்ப்பணம் முடித்த பின் சிவபெருமானை வழிபட்ட இடத்தில் இராமலிங்க - பர்வதவர்த்தினி கோவில் உள்ளது. வில் அம்பு ஏதுமின்றி சந்தான ராமராக பிண்டம் கொடுப்பது போல பூணூலோடு காட்சி தருகிறார். ஜடாயுத் துறையில் அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரங்கள் செய்கின்றனர். ஜீவ நதியாக விளங்கும் தாமிரபரணியை தட்சிண கங்கை என்பார்கள். இங்கு ஸ்நானம் செய்பவர்கள் செய்யும் சங்கல்ப ஸ்லோகம் : தாம்ரவர்ணியாம் மஹாநத்யாம் தக்ஷிண கங்காயாம் பூர்வ வாஹின்யாம் வேணுவனே, ஜடாயு ராமச்சந்த்ர தீர்த்தே சகல பாபக்ஷய நிவர்த்யர்த்தம், தாம்ரவர்ணி ஸ்நானம் அஹம் கரிஷ்யே ..
திருநெல்வேலிக்கு வடகிழக்கே அமைந்துள்ள நாரணமால்புரம் எனும் கிராமம் புராண கால சம்பந்தமும், ராமாயண தொடர்பும் உடையது என்பார்கள். அதற்கு தென்கிழக்கே அரை கி.மீ. தூரத்திலுள்ளது ராமேசநல்லூர் எனப்படும் அருகன்குளம். இத்தலத்திலுள்ளது ஜடாயுத் துறை. ஜடாயு தீர்த்தம் உள்ளது. ராமர் பாதத்தில் ஜடாயு மோட்சம் பெற்ற ஸ்தலம். மூலஸ்தானத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயணர் மூலவராக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். தனது இடது தொடையில் லட்சுமி தேவியை அமர்த்தியுள்ளார். காசி கங்கா தீர்த்தக் கிணறு அருகாமையிலுள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.