அருள்மிகு மகிஷாசுரமர்த்தினி திருக்கோயில் (வாழ வெச்ச கோஷ்டம்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
தருமபுரி
Call : +91-
சிந்துத்வீபர் எனும் மகரிஷியின் ஆஸ்ரமத்தைச் சுற்றியுள்ள பகுதி வனப்பானது. அதைக் கைப்பற்ற எண்ணிய மஹிஷ்மதி எனும் அரக்கி, பெண் எருமை வடிவம் கொண்டு அவரைத் துரத்தலானாள். இதைத் தனது ஞான திருஷ்டியால் தெரிந்துகொண்ட ரிஷி, அவளை எருமையாகவே திரியுமாறு சபிக்கின்றார். ஒரு புத்திரன் உருவான பின்னரே சாப விமோசனம் எனக் கூறிவிட்டார். அவளுக்குப் பிறந்தவனே மகிஷாசுரன் எனும் அரக்கன். இவ்வனத்தில் தவம் மேற்கொண்டிருந்த வைஷ்ணவி தேவியின் அழகில் மயங்கிய அசுரன், அவளைச் சிறைப்பிடிக்கப் படையெடுத்து வந்தான். அவனை வதைத்து பின்னர் மகிஷாசுரமர்த்தினியாகக் கோலம் கொண்டாள் என வராஹ புராணக் குறிப்பொன்று கூறுகிறது.
மகிஷாசுரனின் இம்சையைத் தாங்க முடியாமல் தேவர்களும் முனிவர்களும் நாராயணனிடத்து முறையிட, அவரது ஆலோசனையின் பேரில் அனைத்துத் தேவர்களும் தங்களது கண்களிலிருந்து நெருப்பை வெளியிட, அதிலிருந்து ஆயிரம் சூரியர்களின் பிரகாசத்துடனும், மூன்று கண்களுடனும், கரிய திருமேனி கொண்டும் காத்யாயினி தோன்றினாள். தனது 18 கரங்களில் ஆயுதங்களுடன் சென்று கடுமையாகப் போர் புரிந்து அவனது தலையை மிதித்து அவனைச் சம்ஹாரம் செய்தாள் என வாமன புராணம் கூறுகிறது.
க்ஷத்ரியர்களை நாசம் செய்து முடித்த பரசுராமர் தனது மழுவை தூக்கி எறிந்த இடமான கடல் பகுதி தரைப் பகுதியானது. அங்கு அமர்ந்து தவம் மேற்கொண்டார். அப்போது வானில் நான்கு தேவர்களும் நான்கு தேவியர்களும் தோன்றினார்கள். நான்கு தேவியர்களில் ஒருவரே வாழ்வச்ச கோஷ்டத்தில் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.
திருவிதாங்கூர் அரசர்கள் அரியணை ஏறும் முன்னரும், போருக்குச் செல்லும் முன்னரும் தங்களது வாளை அம்மனின் திருவடிகளில் சமர்ப்பித்துத் தொடங்குவது வழக்கம். இதனால் வாள் வைத்த கோட்டம் எனப் பெயருற்று பின்னர் மருவி வாழ்வச்ச கோஷ்டம் என மாறியது.
மூலஸ்தானத்தில் மகிஷாசுரமர்த்தினி தேவி மூலவராக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஏழடி உயரம் கொண்ட திருமேனி. அச்சத்தை உண்டுபண்ணும் கம்பீரமான தோற்றம். நான்கு கரங்களில் ஒன்று திரிசூலம் ஏந்தி உள்ளது. திருவடிகளுக்கருகே சங்கும் சக்கரமும் உள்ளன. திருவடி மகிஷாசுரனின் தலை மீது அழுந்தியுள்ளது.
உள் மண்டபத்தில் ராமாயண, மஹாபாரத காவியங்களில் இடம் பெற்ற முக்கிய கதாபாத்திரங்கள் பல அரிய சிற்பங்களாக கம்பீரமாக நிற்கின்றன. ஸ்ரீ ராமர், சீதா தேவி, லக்ஷ்மணன், தசக்கிரீவ ராவணன், இந்திரஜித், சகுனி, கர்ணன், அர்ச்சுணன் ஆகிய சிற்பங்கள் அழகாக இருக்கின்றன. மஹாலட்சுமியுடன் திருமால், அமிர்த கலசத்துடன் காணப்படும் அன்னபூரணி, நடராஜர், கங்காளநாதர், பத்ரகாளி ஆகிய பெரிய திருவுருவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
வாளேந்திய துர்க்கை, தாமரையிலமர்ந்த திருமகள், வீணையுடன் வாணி, ரதியுடன் மன்மதன் ஆகிய சிற்பங்கள் மரத்தில் செதுக்கி உருவாக்கப்பட்டுள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.