அருள்மிகு மடப்புரம் பத்ரகாளி திருக்கோவில்

God Name : -

திருக்கழுக்குன்றம் கோவில்

தஞ்சாவூர்

Call : +91-

மேற்கூரை இல்லாது வெட்ட வெளியில் ஆகாயத்தைப் பார்த்தபடி அமைந்துள்ளது மூலஸ்தானம். மூலவரான பத்ரகாளி நீண்டு நெடிந்துயர்ந்த திருவுருவமாக காட்சி தருகின்றாள். பதின்மூன்று அடி உயர திருமேனி. அஷ்ட புஜங்களுடனும், மிரட்டும் விழிகளுடனும், நாக்கை துருத்தியபடி மிகவும் ஆக்ரோஷமான நிலையில் நிற்கின்றாள். வலது கையில் திரிசூலம் ஏந்தியுள்ளார். இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெரிய பூதங்கள் நிற்கின்றன. தலைக்கு மேலே போருக்குப் புறப்படத் தயார் நிலையில் ராட்சஸக் குதிரை ஒன்று தாவியபடி காணப்படுகிறது. காளிக்குத் துணையாக எழுந்தருளியிருக்கும் அடைக்கலம் காத்த அய்யனார் தரிசனம் தருகின்றார். பிள்ளையார், வீரபத்ரர், கருப்பண்ணசாமி, சின்ன அடைக்கலம் காத்த சாமி ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். பின்புறப் பிரகாரத்தில் வேப்பமரம். இதில் மஞ்சள் கிழங்கைக் கட்டிப் பிரார்த்திக்கின்றனர். சேலையைக் கிழித்து அரச மரத்தில் தொட்டில் போடும் சம்பிரதாயம் கடைப்பிடிக்கின்றனர். காசு வெட்டிப் போடும் பழக்கமும் உள்ளது. ஆதி காலத்தில் நீதிபதிகளே கோவிலுக்கு வந்து காளிக்கு முன்பாக சத்தியப் பிரமாணம் வாங்கிக் கொண்டு வழக்கை நடத்தி வந்தார்களாம். வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் கூட்டம் அலை மோதும்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.