அருள்மிகு பழநி தண்டாயுதபாணி திருக்கோவில் (குமரமலை)
God Name : தண்டாயுதபாணி
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
பழநிக்குச் சென்று பழநியாண்டவரை தரிசித்த பின்னரே மற்ற வேலைகளைச் செய்யும் பழக்கமும், கார்த்திகை நாளன்று பழநிக்குக் காவடி எடுப்பதுமாக இருந்தார் இவ்வூரைச் சேர்ந்த முருக பக்தர் ஒருவர். வயதானபடியாலும், தள்ளாமையாலும் தன்னால் பழநிக்குப் போக முடியவில்லையே என வருந்திய பக்தரின் கனவில் காட்சி தந்தார் பழநியாண்டவர். தான் இவ்வூரில் இருப்பதாகவும், தன்னைத் தேடிப் பழநிக்குப் போக வேண்டாம் என்றும் முருகன் கூறினார். கனவில் தோன்றி முருகன் குறிப்பிட்டுள்ள இடத்தில் சங்குச் செடிகள் புதராக வளர்ந்திருந்தது. புதரின் அருகே விபூதிப்பை, ருத்ராட்ச மாலை, பிரம்பு, எலுமிச்சம்பழம் ஆகியன காணப்பட்டன. அந்த இடத்திலேயே வேல் ஒன்றை ஸ்தாபித்து பூஜை செய்து வந்தனர். பின்னர் அழகிய தண்டாயுதபாணியைப் பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர்.
குமரமலையில் கோவில் கொண்ட தண்டாயுதபாணியின் அழகு வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது. பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் எழிலான திருமேனி. விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், இடும்பன் ஆகியோரை தரிசிக்கலாம். இங்குள்ள சங்கு தீர்த்தக் குளத்திலிருந்து நீர் எடுத்துக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.