அருள்மிகு ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோவில் (அம்மையகரம்)

God Name : ஸ்வர்ணபுரீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

விழுப்புரம்

Call : +91-

சித்தர்களின் தலைமைக் குருவான ஸ்ரீ காகபுஜண்டர் இத்தலத்தில் 16 ஆண்டுகள் தவமிருந்தார். இதன் காரணமாக 16 முகங்களைக் கொண்ட சிவபெருமானைக் காணப் பெற்றார். தனக்குக் கிடைத்த தரிசனம் ஊர் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 16 திருமுகங்கள் கொண்ட ஷோடஸ லிங்கம் ஒன்றை ஸ்தாபித்தார். தென் பொன் பரப்பையை ஆண்ட வானகோவராயன் என்பவன் இவ்வாலயத்தை எழுப்பினான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ஸ்ரீ காகபுஜண்டரும் அவரது மனைவி பகுளா தேவியும் ஜீவசமாதி அடைந்தனர். அந்த சமாதி ஆலயத்தின் உள்ளே உள்ளது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்வர்ணபுரீஸ்வரர். உயரமான பாணம் கொண்டு காட்சி தரும் அழகான சிவலிங்கம். சூரியகாந்த தன்மை கொண்ட ஷோடஸ லிங்கம். 16 முகங்கள் கொண்டது. லிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் செய்தால் 16 தனித்தனி கோடுகளாக பீடம் வந்து சேரும். வெண்கல சத்தம் வருவது சிறப்பு அம்சமானது. ஆவணி, பங்குனி மாதங்களில் காலை வேளைகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள், நந்தியின் இரண்டு கொம்புகள் வழியாகச் சென்று சுவாமி மீது படர்ந்து, மீண்டும் நந்தியிடமே வருவது கண்கொள்ளாக் காட்சி. நந்தியம் பெருமான் தலை சாய்த்திராமல் நேராக சிவனைப் பார்த்தபடி பால நந்தியாகக் காணப்படுகிறார். மயில் மீதமர்ந்த முருகனின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. எட்டடி உயரம் கொண்ட திருமேனி. வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.