ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்த்ராள் அதிஷ்டானம் - ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் (நெரூர்)
God Name : ஸ்ரீ காசி விஸ்வநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
மதுரை
Call : +91-
ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்த்ராள், சோமநாதர் - பார்வதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்து சிவராமகிருஷ்ணன் என்ற பெயர்கொண்டு வளர்ந்து வந்தார். காமகோடி பீடத்து மஹா சந்நிதான சங்கராச்சாரியாரும், 57வது பீடாதிபதியுமான (கும்பகோணம்) ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதியை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றவர். ஸ்ரீதர அய்யாவாள், அப்பய்ய தீட்சிதர், தியாகராஜர் ஆகிய மஹான்களின் சம காலத்தவராக இருந்தவர் போதேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள். மானஸ சஞ்சரரே..., ப்ருஹி முகுந்தேதி... போன்ற கீர்த்தனைகளை எளிய ராகத்தில் இயற்றியவர். தர்க்க சாஸ்திரத்தில் வல்லவரான இவரை, இவரது குரு மைசூருக்கு அனுப்பி அங்குள்ள அரசவையில் உள்ளவர்களுக்கு வேத விஷயங்களின் விளக்கங்களை அளித்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்குமாறு பணித்தார். தேசம் முழுவதும் சஞ்சாரம் செய்து ஆன்மீகத் தொண்டு ஆற்றியவர். எளிமை, இனிமை ஆகிய நற்பண்புகளோடு, எல்லோரிடமும் தனது சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்ளும் இயல்பு கொண்டவர். 'எல்லோரையும் பேச விடாமல் செய்கிறாயாமே?' என அவரது குரு கேட்ட தினத்திலிருந்து, வாய் திறந்து யாரிடமும் பேசாமல் மௌனியானார். ஒரு சமயம், கொடுமுடி அருகே உள்ள ஆற்றங்கரையில் சமாதி நிலையில் அமர்ந்திருந்தார் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்த்ராள். காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வந்து, சமாதி நிலையில் அமர்ந்துள்ள சதாசிவரையும் மூழ்கடித்தது. இவருடைய ஆயுள் முடிந்ததெனக் கருதிய கொடுமுடி மக்கள் கதறி அழுதனர். பல மாதங்களுக்கு பிறகு காவிரியில் நீர் வற்றிய சமயத்தில், ஒருவர் மண்ணை அகழ்ந்து கொண்டிருந்த போது மண் வெட்டியிலிருந்து ரத்தம் கசிய ஆரம்பித்ததாம். மேலும் தோண்டிப் பார்த்ததில், சமாதி நிலைகொண்டிருந்த சதாசிவர் எழுந்து நடந்து சென்றாராம். இறுதிக் காலத்தில் நெரூர் வந்து சேர்ந்த சதாசிவர், தான் சமாதி ஆகப் போகும் இடத்தை தேர்வு செய்தார். பின்னர் உணவு, உறக்கம் துறந்து படிப்படியாக சமாதி நிலைக்கு தன்னை கொண்டு சென்றார். ஆனி மாதம் வளர்பிறை அன்று தனது பூத உடலை துறக்க இருப்பதாக அறிவித்தார். சமாதியானதும் காசியிலிருந்து சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு ஒரு ப்ராம்மணர் வருவார் என்றும், அந்த லிங்கத்தை தனது சமாதியருகே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் முன்கூட்டியே தெரிவித்திருந்தார். வேத கோஷங்களும் மந்திர ஒலிகளும் சூழ, கூடியிருக்கும் ஜனத்திரள்களின் மத்தியில், தான் தேர்வு செய்த இடத்தில் குழியில் இறங்கினார் சதாசிவர். கூடியிருந்த பக்தர்கள் குழியை மூடி சமாதிக்கு சடங்குகள் நடத்தினர். ஜீவ சமாதியான 10ம் நாள் சமாதிக்கு குடை பிடிப்பது போல் வில்வமரம் ஒன்று முளைத்தது.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார். காசியிலிருந்து தருவிக்கப்பட்ட லிங்க மூர்த்தம். அன்னை விசாலாட்சியும் உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்த்ராளின் ஜீவ சமாதி இங்குள்ளது. இவரது ஜீவ சமாதியிலிருந்து வரும் ஆகர்ஷண சக்தி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. தினந்தோறும் காலை நேரத்தில் ஒன்பது மணிக்கு சமாதிக்கு அபிஷேகம் நடக்கின்றது. அப்போது ருத்ரம், சமகம், புருஷ சூக்தம் ஆகியன படிக்கப்படும். பௌர்ணமி நாட்களில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அன்று புஷ்ப அலங்காரம், சஹஸ்ரநாம அர்ச்சனை, அன்னதானம் ஆகியன சிறப்புற நடக்கும். ஒவ்வொரு வருடமும் ஆராதனை விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். தெருவிலேயே அமர்ந்து இலை போட்டு சாப்பிடுவார்கள். சாப்பிட்ட இலை மீது அங்க பிரதட்சிணம் செய்வார்கள். ஏதாவது ஒரு இலையில் சதாசிவ பிரம்மேந்திராள் அமர்ந்து சாப்பிடுவதாக ஐதீகம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.