அருள்மிகு பைரவநாதர் திருக்கோவில் (வைரவன் கோவில்)
God Name : பைரவநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மனை சிறைப்பிடித்த முருகனிடமிருந்து அவரை விடுவிக்கப் புறப்பட்ட சிவபெருமானிடம், பிரணவத்தின் பொருளைக் கூறுமாறு முருகன் கேட்டான். தன்னிடம் உபதேசம் பெற வேண்டுமானால், தந்தை என்று வராமல், பரிவாரங்களுடன் வராமல், தனித்து சிஷ்யனாக வர வேண்டுமென முருகன் கூறிவிட்டான்.
அதன்படி, தன்னுடைய பரிவாரங்களை ஒவ்வொரு இடமாக விட்டுச் சென்ற சிவபெருமான், தனது ஏகாதச ருத்ராம்சங்களை பைரவர் என்கிற சொரூபத்தில் அடக்கி, வைரவன் கோவிலில் விட்டுச் சென்றார். இங்கு பைரவர் கோவில் கொண்ட விபரத்தை ஸ்தல புராணம் விவரிக்கிறது.
கணபதி அக்ரஹாரத்திற்கு கிழக்கே அமைந்துள்ள ஆலயம் இது. தெற்கு நோக்கிய கோவில். கோவிலின் வலப்புறமாக தெற்கு-வடக்காக ஒரு வாய்க்கால் ஓடுகிறது.
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள பைரவநாதர் மிகுந்த வரப்பிரசாதி. காசியில் உள்ள காலபைரவருக்கு உள்ள அத்தனை விசேஷங்களும் இவருக்கும் உண்டு. இவருடைய சந்நிதியில் ம்ருத்யுஞ்சய மந்திரம் ஓதுபவரையும் கேட்பவரையும் கண்டு யமன் அஞ்சி நிற்பான். சந்நிதிக்கு எதிரே சிறிது தூரத்தில் மயானம் உள்ளது.
எதிரிகளுக்கு பயம் தந்து, தன்னை அண்டியவர்களுக்கு அருள் பாலிப்பதால் இவருக்கு பைரவர் என்று பெயர். பைரவரின் வாகனமான நாய்க்கு சாரமேயன் என்று பெயர்.
மிளகை ஒரு சிறு துணியில் மூட்டையாகக் கட்டி, அகலில் வைத்து, நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றப்படுவது பைரவர் தீபம். இதை ஏற்றி, இவருக்கு உகந்த செண்பக புஷ்பத்தால் அர்ச்சிக்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.