அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில் (பட்டீஸ்வரம்)
God Name : மூலவர்: தேனுபுரீஸ்வரர் எனப்படும் பட்டீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
இறைவனிடமிருந்து வாமபாகம் பெற வேண்டி பராசக்தி ஒற்றைக்காலில் தவம் மேற்கொண்ட ஸ்தலம் இது. பராசக்தி ஏகாந்தமாக தவம் செய்ய இத்தலத்தைத் தேர்ந்தெடுத்து, தவம் மேற்கொண்டாள். பராசக்திக்கு உதவ வேண்டி, காமதேனு தனது நான்கு புதல்விகளுள் ஒருத்தியான பட்டியை அனுப்பியது.
(சபளீ, விடலீ, நந்தினி, பட்டி ஆகிய நான்கு புதல்விகள்)
காமதேனுவின் புதல்வியர் நால்வரில் ஒருத்தியான பட்டி என்பவள் வழிபட்டு பூஜித்ததால் இறைவன் பட்டீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். ஊருக்கு பட்டீஸ்வரம் எனப் பெயர் வந்தது.
விஸ்வாமித்ரருக்கு காயத்ரி மந்திரம் சித்தி பெற்று பிரம்ம ரிஷி பட்டம் கிடைக்கப் பெற்ற ஸ்தலம் இது.
ராவண வதத்தால் ராமருக்கு உண்டான ராஜஹத்தி மற்றும் சாயாஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற ஸ்தலம் இது.
ராமபிரான் தனது கோதண்டத்தால் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, இவ்விறைவனை பூஜித்துள்ளார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஞானசம்பந்தர் போகும் வழியில் வேனில் வெப்பம் தெரியாதபடி இருக்க முத்துப்பந்தல் அமைக்கும்படி பூதகணங்களுக்கு கட்டளையிட்டார் இறைவன். வானத்தில் அசரீரியும் முத்துப்பந்தலும் ஒருங்கே தோன்ற சம்பந்தர் இத்தலம் வந்து சேர்ந்தார்.
கோபுரத்தின் புறத்தே நின்று கொண்டு ஞானசம்பந்தர் இறைவனை வணங்கியபோது, நந்தியை விலகி நிற்குமாறு பணித்துவிட்டு பட்டீஸ்வரர் தரிசனம் தந்தார். இன்றளவும் நந்தி விலகியே காணப்படுகிறது.
காம்பீலிதேசத்து அரசன் இவ்வுர் துர்க்கையை வேண்டி புத்ர பாக்யம் பெற்றான்.
சோழ மன்னர்கள் போர்க்களம் செல்லும் முன், முக்கிய முடிவுகள் எடுக்கும் முன், பட்டீஸ்வர துர்க்கையை வணங்கி வழிபட்ட பின்னரே செயல்படுவார்கள்.
மார்கழி மாத அமாவாசையன்று ராமர் உண்டாக்கிய தீர்த்தத்தில் அனைவரும் நீராடுவார்கள்.
இது ஒரு தேவாரத்திருத்தலம்.
மூலவர்: தேனுபுரீஸ்வரர். அம்பாள்: ஞானாம்பிகை எனப்படும் பல் வளை நாயகி.
சிறப்பு மூர்த்தம்: அஷ்டபுஜ துர்க்கை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் தேனுபுரீஸ்வரர். பட்டீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
கிழக்கு பார்த்த சந்நிதி. அம்பாள் பல் வளை நாயகி எனப்படும் ஞானாம்பிகை உடன் எழுந்தருளியுள்ளார்.
கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் ஒற்றைக் காலில் நின்று கொண்டு தவக்கோலத்தில் தபஸ் அம்மனாக இருக்கின்றாள். ஞானாம்பிகை என்ற பெயரும் உண்டு. இறைவனிடமிருந்து வாம பாகத்தைப் பெறுவதற்காக தவமிருந்ததாகக் கூறுவர்.
முதல் பிரகாரத்து மேற்கிலுள்ள சந்நிதியில், ஆறடி உயரம் கொண்ட அழகிய திருமேனியுடன் ஆஜானுபாகு தோற்றம் கொண்ட ஷண்முகர் எழுந்தருளியுள்ளார். மயிலின் நெளிவும், மயில் கழுத்தின் வளைவும், தோகையில் காணப்படும் வரிகளும் அற்புதமாக உள்ளன. வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர்.
இரண்டாம் பிரகாரத்தில் நாம் தரிசிக்கும் பைரவ மூர்த்தியின் திருவுருவம் அற்புதமாக இருக்கின்றது. ஜ்வாலாமுடி ஜொலிக்க, கண்களில் கோபக்கனல் வீச, இடுப்பிலுள்ள பாம்பு சீறி நிற்க பயமுறுத்தும் தோரணையில் இருந்தாலும், திருமுகத்தின் கருணை நம்மை ஈர்க்கிறது. பற்கள் வெளியே தெரியும்படியும், நாக்கை தொங்கவிட்டுக் கொண்டும், வாலை சுருட்டி வைத்தபடியும் காட்சி தரும் பைரவ வாகனமான நாய் அழகாக உள்ளது. வெள்ளைத் துணியில் மிளகை கட்டி வைரவ தீபம் எனப்படும் நெய் தீபம் ஏற்றுகின்றனர்.
மூன்றாம் பிரகாரத்தில் ஸ்தல விருட்சமான வன்னி மரமும், ஞானவாவி தடாகமும் உள்ளன. அதன் கரையில் ஆக்ஞா கணபதி எழுந்தருளி ஆசி வழங்குகின்றார். உள் கோபுர வாசலையடுத்து சந்நிதி கொண்டுள்ளார்.
ஆக்ஞா என்றால் உத்தரவு எனப் பொருள். சோழ மன்னர்கள் விழாக்களுக்கு முன்பாக இவரை வழிபட்டு, இவரது உத்தரவைப் பெற்ற பிறகே செயலில் இறங்குவார்கள்.
வடக்கு கோபுர வாசலில் உள்ள பிரதான சந்நிதியில் அஷ்டபுஜ துர்க்கை வடக்கு பார்த்து எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். மகிஷன் தலை மீது பாதம் வைத்து த்ரிபங்க ரூபியாக, த்ரிநேத்ர தாரியாக தரிசனம் தரும் விஷ்ணு துர்க்கையான இவள் மிகுந்த வரபிரசாதி. சக்கரம், அம்பு, கத்தி மற்றும் அபய ஹஸ்தம் - சங்கம், வில், கேடயம் கொண்டுள்ளார். ஊரு ஹஸ்தத்தில் கிளியை ஏந்தியுள்ளார். பின்னால் சிம்ம வாகனம் உக்ரமாக நிற்கின்றது.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் அஷ்டமி - நவமி தினங்கள், அமாவாசை - பௌர்ணமி நாட்கள் ஆகிய விசேஷ தினங்களில் கூட்டம் அலை மோதும்.
துர்க்கைக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி பிரார்த்திக்கும் பக்தர்கள் ஏராளம். (குருக்கள் 9 கஜ புடவையை மடிசார் பாணியில் அணிவித்து, அலங்காரம் செய்வது சிரத்தையாக உள்ளது. மீண்டும் மீண்டும் தரிசிக்க ஆசையைத் தூண்டும் அழகு.)
செவ்வரளி (கரவீரம்) மலர்களாலும், விஷ்ணுகிரந்தி இலைகளாலும் அர்ச்சிப்பது விசேஷம். 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம்பழ மாலை அணிவிக்கின்றனர். ராகுவின் அதிதேவதையான துர்க்கையை ராகு கால வேளைகளில் ராகு வழிபடுவதாக ஐதீகம்.
அம்மன் கோவில் உள் மண்டபத்தில் இக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்த கோவிந்த தீட்சிதரின் திருவுருவத்தைக் காணலாம். சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த பிரபல அட்வகேட் வி.ஆர்.கோபாலன் அவர்கள் இந்த கோவிலுக்கு பெரிதும் உதவி பல நற்பணிகளை செய்துள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.