அருள்மிகு சிவபுரநாதசுவாமி திருக்கோவில் (திருச்சிவபுரம்)
God Name : மூலவர்: சிவபுரநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
நந்தியின் சாபம் பெற்ற விஷ்ணுவின் சாபம் நீங்கிய ஸ்தலம். திருமால் வராஹ வடிவில் இவ்விறைவனை பூஜித்து வழிபட்டுள்ளார். இதை விளக்கும் புடைப்பு சிற்பம் ஒன்று தட்சிணாமூர்த்தி சந்நிதி அருகே மதிற்சுவரில் காணப்படுகிறது. வராஹமூர்த்தியின் திருமேனியில் பட்ட மண் துகள்களை பூமா தேவி திரட்டி சிவலிங்கமாக அமைத்து வழிபட்டதாக கூறுகின்றனர்.
இத்தலத்தில் பூமிக்கடியில் சிவலிங்கம் இருப்பதால், அதன் மீது நடக்க மனமில்லாமல், அங்கப்பிரதட்சிணம் செய்து இறைவனை தரிசித்து விட்டு, பின்னர் ஊரின் எல்லைக்கப்பால் நின்று பதிகம் பாடினார் திருஞானசம்பந்தர். அப்படி நின்று பாடிய இடம் சுவாமிகள் துறை என்றழைக்கப்படுகிறது.
தேவாரத்திருத்தலம்
மூலவர்: சிவபுரநாதர், அம்பாள்: சிங்காரவல்லி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான சிவபுரநாதர். சித்திரை மாதம் 4, 5, 6 தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. இவருக்கு சிவகுருநாதர், பிரம்மபுரீஸ்வரர் என்றெல்லாம் பெயர்களும் உண்டு.
அருள் வடிவமான அன்னை சிங்காரவல்லி தனி சந்நிதி கொண்டுள்ளார். ஆர்யாம்பாள், பெரியநாயகி போன்ற பெயர்களும் உண்டு.
இத்தலத்தில் பைரவர் விசேஷ மூர்த்தியாக எழுந்தருளியிருப்பதால் இதை காலபைரவ க்ஷேத்திரம் எனக் கூறுவர். கோரைப்பற்களுடனும், சூலாயுதம் ஏந்தியும் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளி தரிசனம் தருகின்றார். வாகனமான நாய் இடப்புறமாக திரும்பி பைரவர் முகம் பார்த்த வண்ணம் இருப்பது விசேஷமாக உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.