அருள்மிகு ராமநாதேஸ்வரர் திருக்கோவில் (குருவி ராமேஸ்வரம்)
God Name : ராமநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
ஸ்ரீ ராமனைப் பிரிந்து லங்கையில் தனித்திருந்த பாவம் போக சீதா தேவி இத்தலத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தாள். பிரத்யட்சமான சிவபெருமானிடம் ராவணனுடன் நடந்த யுத்தத்தில் உயிரிழந்த வானர சேனைகள் முக்தியடைய வேண்டும் என ராம - லட்சுமணர்கள் பிரார்த்தித்தனர். பின்னர் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி, இவ்விறைவனை வழிபட்டனர் என ஸ்தல வரலாறு.
குருவி ஒன்று ராமேஸ்வரம் சென்று கடலில் குளிக்க ஆசைப்பட்டு ராமரை சந்தித்து விண்ணப்பித்தது. சிறிய பறவை வெகு தூரம் பறந்து சென்று கஷ்டப்படாமலிருக்க, அம்பு எய்து பூமியில் நீர்ப்பெருக்கு ஏற்படுத்தினார். இதில் குளித்தால் ராமேஸ்வரத்தில் குளித்த பலன் கிட்டும் என்ற வரத்தையும் வழங்கினார். இதனால் இவ்வூர் குருவி ராமேஸ்வரம் என்ற பெயரைக் கொண்டது.
ராமன் பிரம்மாஸ்திரத்தால் உண்டாக்கிய குளம் பிரம்ம தீர்த்தம். கோதண்ட தீர்த்தம் என்றும் கூறுவார்கள்.
கடம்பவனம், சீதா ராமேஸ்வரம் என்றெல்லாம் பெயர்களைக் கொண்ட ஸ்தலம்.
மூலவர்: ராமநாதர், அம்பாள்: மங்களாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ராமநாதர். உயர்ந்த பாணம் கொண்டும் ஒளி வீசும் திருமேனியுடனும், நாகாபரணம் அணிந்தும் கம்பீரமாக தரிசனம் தருகின்றார். மாசி மாதம் 22-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
அம்பாள் மங்களாம்பிகை தனி சந்நிதி கொண்டு எழுந்தருளியுள்ளார்.
அழகிய கோஷ்ட மூர்த்தங்கள், அர்த்தநாரீஸ்வரர், பிட்சாடனர், சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை, கணபதி, தட்சிணா மூர்த்தி ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். பிரகார வலச்சுற்றில் சீதாதேவி பூஜித்து வழிபட்ட லிங்க மூர்த்தத்தை தரிசிக்கலாம்.
தோஷ நிவர்த்திகளுக்காகவும் பிதுர் பூஜைகளுக்காகவும் ராமேஸ்வரம் போக முடியாதவர்கள் இங்கேயே நேர்த்திக் கடன்கள் செய்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.