400 ஆண்டுகட்கு முன்பு, அயோத்தியிலுள்ள மாணிக்பூரில் நாகூர் மீரான் என்ற மகான் தோன்றினார். தந்தையார் ஹஸன் குத்தூஸ், தாயார் செய்யிது பாத்திமா. இவர் முகம்மது நபியின் இருபத்தியோராவது தலைமுறையில் வந்தவர் என்பர்.
இவர் தமது எட்டாவது வயதிலேயே அரபி மொழியையும் இலக்கணங்களையும் கற்றுணர்ந்தார். வயது கூடக் கூட அவரது தொழுகை முறையும் தூய்மையும் அதிகரித்தன. சையத் முகம்மது கவுஸ் சாயப் என்பவரிடம் தீட்சை பெற்றார்.
பின்னர் தமது சீடர்களுடன் பல நாடுகளுக்கு யாத்திரை சென்றார். வழியில் இவர் செய்த அற்புதங்கள் பல. குருடருக்கு பார்வை தந்தது, ஊமையை பேச வைத்தது போன்ற பல அதிசயங்களை நிகழ்த்தியவர். இலங்கையில் ஆட்சி புரிந்து வந்த அச்சுதப்ப நாயக்கரின் தீராத வயிற்று வலியைப் போக்கினார். அரசன் மகிழ்ந்து, இப்போது தர்கா இருக்கும் பூமியைத் தந்ததாகக் கூறுகின்றனர். அதே இடத்தில் மீரான் சாயபு தமது இறுதிக் காலம் வரை, அவரது மகனுடன் தங்கியிருந்தார். அவர் காலமானபின் இதே இடத்தில் கட்டிடம் எழுப்ப தஞ்சை நாயக்கர் உதவி புரிந்தார் எனக் கூறப்படுகிறது.
மராட்டிய மன்னர்களால் போற்றப்பட்ட துறவி மீரானின் சமாதி (தர்கா) ஏழு வெள்ளிக் கதவுகள் கொண்ட அழகான மசூதிக்குள் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.