அருள்மிகு சோமநாதேஸ்வரர் திருக்கோவில் (திருநீடூர்)

God Name : மூலவர்: அருட்சோமநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

ஊழிக்காலத்துப் பெரு வெள்ளத்திலும் அழியாது நீடித்து இருந்ததால் 'நீடூர்' எனப் பெயர் பெற்றது. மகிழ மரங்கள் மிகுந்து காணப்பட்டதாலும், ஸ்தல விருட்சம் மகிழ மரமானதாலும் 'வகுளாரண்யம்' எனப் பெயர் கொண்டது. பூலோகத்தில் பயணித்துக் கொண்டிருந்த இந்திரன் இத்தலமருகே வந்தபோது சிவபூஜை செய்யலாமென லிங்கத்தைத் தேடினான். ஒன்றும் கிடைக்காததால் காவிரி ஆற்று மணலை எடுத்து லிங்கம் ஒன்றை உருவாக்கி சிவபூஜை செய்தான். அதையே பிரதிஷ்டை செய்து வழிபட்டான். சிவநடன தரிசனம் பெற பிரார்த்தனை செய்தான். அவனது வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன் பிரத்யட்சமாகி நடனம் ஆடி காண்பித்தார் என வரலாறு. இதனால் 'கான நர்த்தன சங்கரன்' என்ற பெயர் வந்தது. தனக்கு சாரூபம் வேண்டும் என கடுந்தவம் மேற்கொண்டான் சந்திரன். பிரத்யட்சமான இறைவன், "பகலில் சூரியன் ஒளி தருவது போல் இரவில் நீ ஒளி தருவாயாக" என வாழ்த்தி வரமளித்தார். பொன்னாலான தேர் ஒன்றினையும் தந்தார். பின்னர் தட்சனின் சாபத்தால் அத்தனையும் இழந்துவிட்டு, மிருத்யுஞ்ச மந்திரம் ஜபித்து மீண்டும் தவம் இருந்தான் சந்திரன். அவனது ஒற்றைக் கலையை தனது ஜடாமுடியில் தரித்து அபயமளித்து, "வளர்பிறை - தேய்பிறை உனது இயல்பாகிவிடும், இதுவும் உலக நன்மைக்கே" என ஆசிர்வதித்தார். சோமனுக்கு அருள் செய்ததால் 'அருட்சோமநாதர்' ஆனார். நண்டாகப் பிறந்த அசுரன் ஒருவன் பூர்வ ஜென்ம பாவங்களைப் போக்கிக் கொள்ள இவ்விறைவனை வழிபட்டு, இறைவனருளால் லிங்கத்திருமேனிக்குள் துளையிட்டுக் கொண்டு சென்று ஐக்கியமானான். ஆடி மாத பௌர்ணமியில் கற்கடக பூஜை நடத்துகின்றனர். பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்சவம். முனையடுவார் நாயனார் அவதரித்து, தொண்டு செய்து, முக்தி பெற்ற ஸ்தலம். இது ஒரு தேவாரத்திருத்தலம்.
மூலவர்: அருட்சோமநாதர், அம்பாள்: வேயுறு தோளியம்மை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக அருட்சோமநாதர் எழுந்தருளியுள்ளார். லிங்கத் திருமேனியின் உச்சியில் ஒரு நண்டு உள்ளே செல்லும் அளவுக்கு பெரிய துளை ஒன்றும் இருக்கின்றது. சந்திரன் (சோமன்) வழிபட்டதால் சோமநாதர் எனும் திருநாமம் பெற்றார். 'கான நர்த்தன சங்கரன்' என்ற திருநாமமும் உண்டு. ஆவணி மாதத்தில் சூரிய ஒளி சுவாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றது. இது சுயம்பு லிங்க மூர்த்தம். கிழக்கு நோக்கிய சந்நிதி. தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பிகை வேயுறு தோளியம்மை அழகே உருவாக எழுந்தருளி காட்சி தருகின்றாள். 'ஆதித்ய அபய பிரதாம்பிகை' என்ற பெயரும் உண்டு. இறைவனின் கோபத்திற்கு ஆளான சூரியனுக்கு அபயம் தந்ததால் 'ஆதித்ய அபய பிரதாம்பிகை' என்ற பெயர் கொண்டாள். ஆசி வழங்கும் பிள்ளையார்களாக - சிந்தாமணி கணபதி, செல்வ கணபதி, சிவானந்த கணபதி ஆகியோர் இருக்க, அழகான முருகனையும் தரிசிக்கலாம். காசி-விஸ்வநாதர், சிவலோக நாதர், கைலாச நாதர், மகாலட்சுமி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். இங்குள்ள சோமாஸ்கந்த மூர்த்தம் பேரெழிலுடன் விளங்குகிறது. இது 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கின்றனர். முனையடுவார் நாயனாரின் திருவுருவம் கைகூப்பியவாறு உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.