அருள்மிகு இருள்நீக்கீஸ்வரர் திருக்கோவில் (எரையூர்)

God Name : இருள்நீக்கீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவள்ளூர்

Call : +91-

சாபம் பெற்று இருளில் மூழ்கிய அக்னி இவ்விறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். எரி ஆகிய அக்னி வழிபட்டதால் இவ்வு+ர் எரியூர் எனப் பெயர் கொண்டு, நாளடைவில் எரையூர் என்றானது. சந்திரன், சூரியன் தத்தம் மனைவிகளோடும் மற்றும் அகஸ்தியரும், இவ்விறைவனை வழிபட்டு பூஜித்துள்ளனர். அகஸ்தியருக்கும் திருமாலுக்கும் இறைவன் மணக்கோலத்தில் காட்சி தந்த ஸ்தலம். சந்திரனும் சுக்கிரனும் சண்டாள தோஷம் நீங்கப் பெற்ற ஸ்தலம். சனிக்கிழமைகளில் ருத்ராபிஷேகம் செய்கின்றனர்.
மூலஸ்தானத்தின் மூலவரான இருள்நீக்கீஸ்வரர் சிவலிங்க ஸ்வரூபமாக, செம்பொன் ஜோதியாக சூரியன், சந்திரர்களைக் கண்களாகக் கொண்டு, செம்பொன் ஜோதியாக எழுந்தருளி அருள் புரிகின்றார். பங்குனி மாதம் முழுவதும் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. அன்னை இன்பாம்பிகை உடன் எழுந்தருளியுள்ளார். கோஷ்டத்தில் காணப்படும் சங்கரநாராயணரும், தட்சிணாமூர்த்தியும் வித்தியாசமான அழகோடு காணப்படுகின்றனர். ஸ்ரீ பாலசந்திர விநாயகர் மற்றும் நந்தியம்பெருமான் ஆகிய திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.