அருள்மிகு தில்லைக் காளியம்மன் திருக்கோவில் (சிதம்பரம்)
God Name : வீரபத்ரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவள்ளூர்
Call : +91-
சிவபெருமான் தில்லைக்கு வந்தபோது, கிராம தேவியாகிய தில்லைக்காளி, அவருக்கு இடம் கொடுக்க மறுத்து விட்டாள். காளியும் சிவபெருமானும் நடம் புரிவதென்றும், இந்த போட்டியில் தோற்றவர் ஊருக்கு அப்பால் சென்று விடுவதென்றும், ஒப்பந்தம் செய்து கொண்டனர். காலை தலைக்கு மேல் தூக்கி, கால் விரல்களால் காதுக் குழையை காதில் மாட்டி, ஊர்த்துவ தாண்டவம் ஆடி, காளியை தோற்கடித்தார் சிவபெருமான். கோபங் கொண்ட காளி, இங்கு வந்தமர்ந்தாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது. மூன்று முகங்கள் நான்கு கரங்கள் கொண்டு இருந்தவள், கோபம் தணிந்து பிரம்ம ஸ்வரூபிணியாக தில்லை அம்மனானாள்.
மூலஸ்தானத்தில் தில்லைக்காளி கிழக்கு பார்த்து எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். அழகான பெரிய திருவுருவம். நல்லெண்ணெய் அபிஷேகம் விசேஷம். அருகே உற்சவ மூர்த்தம் காணலாம். பக்கத்தில் வீரபத்ரர் சந்நிதி கொண்டு தரிசனம் தருகின்றார். மூலஸ்தானத்தைச் சுற்றி வருகையில் - வடக்கு பிரகாரத்தில் நான்கு முகங்களுடன் பிரம்ம ஸ்வரூபிணி, கிழக்கு பிரகாரத்தில் நாக வைஷ்ணவ ஸ்வரூபிணி, தெற்கு பிரகாரத்தில் கடம்பவன தக்ஷிண ஸ்வரூபிணி என மூன்று சக்திகளாக தரிசனம் தருகின்றாள். வடக்கு பிரகாரத்தில் துர்க்கை, சண்டிகேஸ்வரி, பைரவர் ஆகிய மூர்த்தங்களையும், ப்ரஸன்ன விநாயகர், கார்த்திகேயன் ஆகிய அழகிய திருவுருவங்களையும் தரிசிக்கலாம். அஷ்ட பைரவர்களின் தேவியர்களாக திகழும் அஷ்டமாதர்களில் எட்டாவதான கௌரிகை வீணை ஏந்தி காட்சி தருகின்றாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.