யோகி ராம் சுரத்குமார் ஆஸ்ரமம் (திருவண்ணாமலை)
God Name : இல்லை
திருக்கழுக்குன்றம் கோவில்
வேலூர்
Call : +91-
விசிறி சாமியார் என்று அன்போடு அழைக்கப்பட்ட யோகி ராம் சுரத்குமார் - சிவந்த மேனி, கூரிய மூக்கு, தீட்சண்யமான கண்கள் கொண்டு, கையில் விசிறி, கொட்டாங்கச்சி வைத்துக் கொண்டு, கிழிந்த சாக்கை இருக்கையாகக் கொண்டு, மிக சாதாரணமானவராகத் தோற்றம் அளிப்பார். ஆஜானுபாகுவான தோற்றமும், மென்மையான அணுகுமுறைகளையும் கொண்டவர். காசி நகரவாசி எனச் சொல்கின்றனர். ஆஸ்ரமம் அமையும் முன்பு, திருவண்ணாமலை ரயில் நிலையத்துப் புன்னை மரத்தடியில் சிறிது காலம் வாழ்ந்தவர். தாடியும், மீசையுமான தோற்றம். தன்னை அடிக்கடி பிச்சைக்காரன் என்று கூறிக் கொள்வார். இவரது கண்கள் சஞ்சரித்துக் கொண்டே இருக்கும். ஆனால் தன்னிடம் வருபவர்களை ஊடுருவி நோக்கும். அவர்களின் வாழ்க்கையை ஊடுருவிப் பார்ப்பார். எங்கோ காது கொடுத்துக் கேட்பார். எதைக் கண்டோ சிரிப்பார். ஆங்கிலம், இந்தி, தமிழ் என எல்லா மொழிகளிலும் பேசுவார். இவருடைய மௌனம் அன்புமொழி. நல்ல மனத்தையும், நம்பிக்கையையும் கொண்டு போகும் எவருக்கும், இவருடைய ஆசி கிடைக்கும். இவரது பதில்களில் உண்மையின் பிரதிபலிப்பும், நம்பிக்கையும் மிளிர்கிறது. இவர் சொன்னது நடக்கிறது. இவருடைய மகாத்மியம் சூரிய ஒளி போல் எங்கும் வியாபித்து இருக்கிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.