சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஸ்ரமம் (திருவண்ணாமலை)

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

வேலூர்

Call : +91-

சாக்த நெறியைப் பரப்புவதற்காக ஸ்ரீ ஆதி சங்கரரால் கொண்டு வரப்பட்டு காஞ்சியில் குடியமர்த்தப்பட்ட காமகோடி பீடத்தைச் சேர்ந்த வரதராஜன் - மரகதாம்பாள் தம்பதியினரின் குழந்தையாகப் பிறந்தவர் சேஷாத்ரி ஸ்வாமிகள். சிறுவயதிலேயே தெய்வபக்தியை வளர்த்துக்கொண்டு, வேதங்களையும் உபநிஷத்களையும் பால்ய பருவத்திலேயே கற்றுத் தேர்ந்தார். தனது 19ம் வயதில் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். தனக்கென ஒரு இடம் என்றிராமல் சுற்றிக் கொண்டே இருப்பார். ஏதாவது ஒரு இடத்தில் படுத்து தூங்கி விடுவார். எளிமையான வாழ்வும் தூய பக்தியும் கொண்டு சக்தி உபாசகராக விளங்கிய சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆன்மீகப் பணியைத் தொடர்ந்தார். இவர் போகும் கடை அல்லது உணவகத்தினருக்கு வியாபாரம் பெருகி நன்மை நடப்பதாக அனைவராலும் கூறப்படுகிறது. பக்தர்களுக்கு தங்கும் வசதியும், உணவு வசதியும் ஆஸ்ரமத்தினர் ஏற்படுத்தி தருகின்றனர்.
மரங்களடர்ந்த சோலையில் அமைந்துள்ள ஆஸ்ரமம். அருணகிரியை நோக்கி அமர்ந்து தியானிக்கலாம். ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் சமாதியும், தியான மண்டபமும் காணலாம். நித்ய பூஜைகள் யாவும் சிறப்புற நடக்கின்றன. திங்கட்கிழமை மாலை பஜன். நூலகம், உணவகம் ஆகிய வசதிகள் பக்தர்களுக்காக ஏற்படுத்தியுள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.