ஸ்ரீ ரமணாஸ்ரமம் (திருவண்ணாமலை)

God Name : மாத்ருபூதேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

வேலூர்

Call : +91-

1879ம் ஆண்டு டிசம்பர் 30, ஆருத்ரா தரிசன நன்னாளில் மதுரை மாநகரத்தின் திருச்சுழி எனும் ஊரில், அழகம்மை-சுந்தரம் அய்யர் தம்பதியினரின் இரண்டாவது குழந்தையாகப் பிறந்த வேங்கடராமனே ஸ்ரீ ரமணர். சிறு வயதிலேயே நாயன்மார்களின் சரித்திரத்தை படிக்க ஆரம்பித்த வேங்கடராமன் அதன் பால் சிந்தனையில் ஆழ்வதும், அதன் பயனாக பல விஷயங்களுக்கு விடை காணவும் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். திருவண்ணாமலையில் பாதாளலிங்கம் இருக்கும் இடத்தில் ஆரம்பித்து பல இடங்களில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து விடுவார். ஆரம்பத்தில் சிறு வயதில், மலையிலேயே ஒரு குடிசையில் இருந்தார். பிறகு இவருக்கென தனி ஆஸ்ரமும் அதைச் சுற்றி கட்டடங்களும் ஏற்பட்டன. திருச்சுழியிலிருந்து வந்தது முதல், சமாதி நிலை அடையும் வரை, 50 ஆண்டுகட்கு மேலாக, திருவண்ணாமலையை விட்டு வெளியூர் போனதே இல்லையாம். 1922ம் ஆண்டு முக்தியடைந்த அன்னைக்கு சமாதி ஒன்றை எழுப்பி அதன் மேல் லிங்கம் ஒன்றை ஸ்தாபித்தார். மாத்ருபூதேஸ்வரர் எனும் திருநாமம். பகவானின் அன்னை மற்றும் பகவான் சமாதிகளுடன் - மயில், பசு, நாய், முயல், குரங்கு ஆகிய ஜீவன்களின் சமாதிகளும் உள்ளன. ஸ்ரீ ரமண மகரிஷியின் சிலை முன்பாக அமர்ந்து தியானத்தில் அனுபவமும், அமைதியும் கிட்டுகிறது. ஸ்ரீ ரமணர் - ஏப்ரல் 14, 1950 வரை வாழ்ந்தவர். இந்தியாவின் ஆன்மீக ஒளி, உலகெங்கும் பரவி அன்பு வெள்ளத்தில் மூழ்கடிக்கும் என வாழ்ந்து காட்டியவர். எதனால் துக்கமோ அதை களைந்தெறிந்துவிட்டு, தாம் இன்ப வாழ்வு வாழ்ந்ததோடு, மக்களுக்கும் நல்வழி காட்டியவர். மகரிஷி ஸ்ரீ ரமணரின் உரைகளிலிருந்து ........ இதயத்தில் வீற்றுள்ள ஆன்மாவை அறிந்து, அந்நிலை நிற்பவன் - சரியா, பிசகா என்று குழம்புவதில்லை. இறைவனின் திருவருளே நடத்தும்போது எல்லாம் சரியாகத்தான் இருக்கும். ஆசைக்கு இடம் கொடுத்து, ஆசையை அடக்க முயல்வது, நெய் வார்த்து தீயை அணைப்பது போலாகும். ஆஸ்ரமத்தின் வெளியீடான புத்தகங்கள் அனைத்தும் பொக்கிஷங்கள். தங்கும் அறைகள், சாப்பாடு வசதி ஆகிய வசதிகளை யாத்ரிகர்களுக்கு செய்து தருகின்றனர். உலகின் பல பாகங்களிலிருந்தும், பலரும் ஆஸ்ரமத்திற்கு வருகின்றனர்.
ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் உள்ள காப்பகத்தில் பகவான் பயன்படுத்திய பொருட்களையும், கையெழுத்துப் பிரதிகளையும் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர். மாத்ருபூதேஸ்வரர் ஆலயமும் அதன் முன் பகுதியில் புது மண்டபம் ஒன்றையும் காணலாம். புது மண்டபத்தில் ஸ்ரீ ரமணரின் திருவுருவத்தை தரிசிக்கலாம். அவர் அமர்ந்து தர்சனம் தந்த கல்லாலான இருக்கையையும் காணலாம். ஸ்ரீ ரமணரின் அடக்க இடத்தின் மேல் லிங்கப் பிரதிஷ்டை செய்துள்ளனர். நித்ய வேத பாராயணம் செய்கின்றனர். கோசாலை, வைத்யசாலை, நூலகம், வேதபாடசாலை, அன்னதானக்கூடம் ஆகியன அமைத்துள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.