பெரியநாயகி அம்மன் - பொன்மலைநாதர் திருக்கோவில் (தேவிகாபுரம்)
God Name : பொன்மலைநாதர் (சிவன்)
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
வேலூர்
Call : +91-
பிரளய காலத்தில் பார்வதி தேவி இங்கு வந்தபோது, ஒரு பொன்மலை மிதந்து வரக் கண்டாள். பொன்மலை இங்கு நின்றதும், அதனடிவாரத்தில் அமர்ந்து, தவம் புரிந்து பிரத்யட்சமானார் என்றும் ஸ்தல வரலாறு கூறுகிறது. மலையை விட்டு கீழே இறங்கும் வழியில் தேவி தவம் செய்த இடத்தில் தேவியின் திருவடியைக் காணலாம். உக்ரசேனன் எனும் மன்னன் புத்திரபாக்கியம் வேண்டி தவம் மேற்கொண்டான் எனவும், தேவியின் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது எனவும், அக்குழந்தைக்கு தேவிகா எனப் பெயரிட்டதாகவும், அதனால் இவ்வூர் தேவிகாபுரம் எனப் பெயர் கொண்டதாகவும் ஒரு குறிப்பு கூறுகிறது. இத்தலம் சக்தி ஸ்தலங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
ஊரின் நடுவே பெரியநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஏழு நிலை கோபுரத்தின் பிரதான வாசல் வழியே உள்ளே சென்றால் திருக்குளத்தையும், கல்யாண மண்டபத்தையும் காணலாம். குதிரைகள் இரண்டு இழுத்துச் செல்லும் அமைப்பில் கல்யாண மண்டபம் உள்ளது. நுழைவாயிலிலும், கல்யாண மண்டபத் தூண்களிலும், முப்பத்தாறு தூண்களையுடைய மண்டபத்திலும் பல அரிதான சிற்பங்கள் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. மூலஸ்தானத்தில் பிருஹந்நாயகி எனப்படும் பெரியநாயகி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. அரபத்ரா, சுபத்ரா எனும் துவார பாலகியர்கள் சந்நிதியின் வாசலில் உள்ளனர். எதிரே நந்தி வாகனம் உள்ளது. கொடிமரத்தருகே விநாயகரையும் முருகனையும் தரிசிக்கலாம். நடராஜர், சோமாஸ்கந்தர் ஆகிய மூர்த்திகளையும் தரிசிக்கலாம். உற்சவ மூர்த்திகள் அழகாக இருக்கின்றனர். இது கோட்டை மதிற்சுவர்கள் கொண்ட ஒரு பெரிய கோவில்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.