அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் கோவில் (நாவல்பாக்கம்)

God Name : ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

வேலூர்

Call : +91-

ஹயக்ரீவர் புராண வரலாறு: முன்பொரு சமயம், அசுரவதம் முடித்த களைப்பில், ஸ்ரீமந் நாராயணன் - வில்லின் நாணினை தனது முகவாய்க்கட்டையில் சாய்த்து வைத்தபடி, நித்திரை கொண்டார். அவரை பார்க்க வந்த இந்திரன், அயர்ந்து தூங்கும் அவரை எழுப்ப, வில்லின் நாணினை அறுத்தான். அதன் பிரயோக சக்தியால் வில் தெறித்து, திருமாலின் தலை அறுந்து விட்டது. இதை எதிர்பாராத இந்திரன் பராசக்தியை வேண்டினான். இந்திரன் முன் பிரத்யட்சமான பராசக்தி, குதிரை முகம் ஒன்றை, அறுபட்ட திருமால் கழுத்தில் பொருத்துமாறு பணித்தாள். ஹயக்ரீவ அவதாரம் கொண்டால், ஹயக்ரீவ அசுரனுக்கு முடிவு ஏற்படும் என்பதே நோக்கம். ஹயம் என்றால் குதிரை, க்ரீவம் என்றால் கழுத்து எனப் பொருள். அதாவது குதிரை முகத்தையும், மனித கழுத்தையும் கொண்ட ஹயக்ரீவன் எனும் அரக்கன், தன்னைப் போலவே குதிரை முகம் கொண்டவரால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என வரம் பெற்று, மமதை கொண்டு, அனைவரையும் இம்சித்து வந்தான். குதிரை முகமும் மனித உடலும் கொண்ட திருமேனியுடையவர் ஹயக்ரீவப் பெருமான். அசுரனை சம்ஹாரம் செய்து அவதார காரியத்தை முடித்துக் கொண்டார் என தேவி புராணம் கூறுகின்றது. பிரம்மாவிடமிருந்து நான்கு வேதங்களைப் பறித்துக் கொண்ட மது - கைடபர் எனும் இரண்டு அசுரர்களை பாதாள லோகம் சென்று சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு வந்தவர் ஹயக்ரீவர்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். மேற்கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், கீழ்க்கரங்கள் அபய - வரத ஹஸ்தங்களாகவும் கொண்டும், லட்சுமிதேவியை தனது தொடை மீது இருத்தியும், தரிசனம் தருகின்றார். மஹா தேசிகரால் ஆராதிக்கப்பட்டவர். கை கூப்பினால் கேட்கும் பலனை தந்து ஞானத்தை வளர்ப்பவர். நான்கு வேதங்கள் முழங்கியதும், நூறு வேள்விகள் நடத்தப்பட்ட புண்ணிய ஸ்தலம். ஹயக்ரீவ காயத்ரி: ஓம் தம் வாகீச்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி தன்னோ ஹஸௌ ப்ரசோதயாத். ஹயக்ரீவ த்யானம்: ஞானானந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே. ஹயக்ரீவ மூலமந்திரம்: உத்கீத ப்ரணவோத்கீத ஸர்வ வாகீச்வரேச்வர ஸர்வம் வேத மயாசிந்த்ய ஸர்வம் போதய போதய.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.