அருள்மிகு தழுவக் கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் (மேல்படப்பை)
God Name : தழுவக் கொழுந்தீஸ்வரர் மற்றும் ஸ்ரீ வாலீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
இத்தலத்து இறைவனையும் இறைவியையும் சந்திரன் வழிபட்டு சாப விமோசனம் பெற்றான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
'படப்பை' என்ற சொல்லுக்கு 'பூஞ்சோலை' என்று அர்த்தம். பூஞ்சோலையில் சிவபெருமான் எழுந்தருளியதால் இவ்வூர் 'படப்பை' என்ற பெயரைக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மூலவர்: தழுவக் கொழுந்தீஸ்வரர், அம்பாள்: காமாட்சி, மூலவர்: ஸ்ரீ வாலீஸ்வரர், அம்பாள்: நல்லழகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் தழுவக் கொழுந்தீஸ்வரர். 'தழுவக் குழைந்தீசர்' என்ற பெயரும் இவருக்கு உண்டு. மூலவரைப் பார்த்தபடி சூரியனும் சந்திரனும் எழுந்தருளி உள்ளனர்.
அன்னை காமாட்சி தனி சந்நிதி கொண்டுள்ளார். சிவபெருமான் சொல்வதை எப்போதும் கேட்கும் தோரணையில் வலப்புறமாக முகத்தைத் திருப்பியபடி காட்சி தருகிறாள்.
மற்றொரு மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ வாலீஸ்வரர். அம்பாள் நல்லழகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். அவசியம் தரிசிக்க வேண்டிய அழகிய மூர்த்தங்கள் இவை.
அம்பாள் கோஷ்டத்தில் வைஷ்ணவி, லட்சுமி, சரஸ்வதி தேவியரின் திருவுருவங்களை தரிசிக்கலாம்.
ஸ்ரீ வெற்றி விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனான சுப்ரமண்யர், வீரபத்ரர், சரபேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், காசி விஸ்வநாதர், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.