அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோவில் (மாங்காடு)
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
கயிலாயத்தில் சிவபெருமானுடன் அமர்ந்திருந்த உமையவள், ஒரு நாள் விளையாட்டாக சிவபெருமானின் கண்களைப் பொத்தினாள். இதனால் சர்வ லோகங்களும் இருளில் மூழ்கின. சீற்றம் கொண்ட சிவபெருமானால் பூவுலகில் பிறக்கும்படி சபிக்கப்பட்டு, இத்தலத்தில் பிறந்து காமாட்சி எனும் பெயருடன் வளர்ந்து, நீண்ட காலம் தவமிருந்தாள்.
இறைவன் தன்னை ஆட்கொள்ள தாமதம் ஆனதால், வைராக்கியம் பூண்டு, ஐந்து குண்டங்களில் அகோர தீயை வளர்த்து அவற்றின் மத்தியில் ஒற்றைக் காலில் நின்று கொண்டு கடுந்தவம் புரிந்தாள்.
மனமிரங்கிய சிவபெருமான் அங்கு லிங்கம் அமைத்து வழிபட்டு, பின்னர் தன்னை மணக்குமாறும் பணித்தார்.
காமாட்சி வளர்த்த அக்னி குண்டங்களின் வெப்பம் தாங்கமுடியாமல் சுற்றுப்புறத்து மக்கள் மிகவும் அவதியுற்றனர். ஆதிசங்கரரின் அர்த்தமேரு ஸ்ரீசக்கர பிரதிஷ்டையால் அக்னியின் ஆவேசம் குறைந்தது என ஸ்தல புராணம் கூறுகிறது. சக்தி பீடங்களுள் ஒன்று.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஆதி காமாட்சி அன்னை எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். கரங்களில் கிளி மற்றும் கரும்பு வைத்துள்ளார். கருணை பொழியும் கண்களுடன் சாந்த ஸ்வரூபியாக காட்சி தருகிறாள். பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்ட விக்ரஹம். உற்சவ காமாட்சி நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறாள்.
அக்னியின் உக்கிரம் தாங்கமுடியாமல் இவ்வூர் மக்கள் அவதிப்படுவதைப் போக்க, ஸ்ரீ ஆதி சங்கரர் இவ்வூர் வந்தபோது அர்த்தமேரு எனும் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். அஷ்டகந்தம் எனப்படும் எட்டு வகை மூலிகைகளால் உருவாக்கப்பட்டது என்பர்.
அர்த்தமேரு ராஜயந்திரத்தின் அடித்தளமாக கூர்ம வடிவமும் (ஆமை) அதன் மீது மூன்று படிக்கட்டுகள் போல் - முதல் அடுக்கில் 16 இதழ் தாமரையும், இரண்டாவதில் 8 இதழ் தாமரையும், அதன் மேல் ஸ்ரீ சக்கர யந்திரமும் நிர்மாணித்தார். 43 தேவதைகளைக் குறிப்பதாக 43 முக்கோணங்கள் கொண்டுள்ள ஸ்ரீ சக்கர பீடத்திற்கு 18 முழ படவை சாத்துகிறார்கள். குங்கும அர்ச்சனை விசேஷம்.
அபிஷேகங்களை பஞ்சலோக ஆதி காமாட்சிக்கு செய்கின்றனர். ஸ்ரீ சக்கரத்திற்கு புனுகு-சந்தனம் சாத்துகின்றனர். குங்கும அர்ச்சனை செய்கின்றனர்.
கண்களையும் மனதையும் விட்டகலாத அழகிய வடிவம் கொண்ட தபஸ் காமாட்சியை தரிசிக்கலாம். அக்னி சுடரின் முனையில் இடக்கால் கட்டை விரல் மட்டும் ஊன்றி, வலக்காலை தூக்கி மடித்து இடக் காலின் மேற்புறமாகக் கொண்டு, இடக்கையை நாபிக் கமலத்தில் சின் முத்திரையாக வைத்து, ஜபமாலை கொண்டு காட்சி தருகிறாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.