அருள்மிகு திருமேனீஸ்வரர் திருக்கோவில் (கோவூர்)
God Name : மூலவர்: திருமேனீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
பார்வதி தேவி மாங்காட்டில் தவமிருக்கையில், தவத்தீயின் உக்கிரம் எங்கும் வெப்பத்தைப் பரப்பியது. வெப்பத்தின் உஷ்ணம் தாளாமல் உயிர்கள் தவித்தன. விஷ்ணுவின் யோசனைப்படி மஹாலட்சுமி இங்கு பசு வடிவம் கொண்டு கோபுரி எனப் பெயர் கொண்டு, பின் நாளடைவில் மருவி கோவூர் என்றானது.
மஹாலட்சுமி இவ்விறைவனை வழிபட்ட ஸ்தலமாதலால், ஸ்தல விருட்சமான மகா வில்வ மரத்தில் 5, 6, 7, 9 தளங்கள் கொண்ட இலைகள் உள்ளன. அதாவது 27 இலை அடுக்குகள்.
சேக்கிழார் பெரிய புராணம் எழுதத் தொடங்கிய ஸ்தலம். தியாகபிரம்மம் இவ்விறைவனைப் பற்றி பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியுள்ளார்.
சென்னையிலிருக்கும் நவகிரக ஸ்தலங்களுள் புதன் ஸ்தலம், தேவார வைப்புத் தலம்.
மூலவர்: திருமேனீஸ்வரர், அம்பாள்: சௌந்தராம்பிகை.
மூலஸ்தானத்தில் திருமேனீஸ்வரர் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார். திருமேனி சற்று இடப்புறமாக சாய்ந்திருப்பது போல் தெரிகிறது. அழகான லிங்க மூர்த்தமாக தரிசனம் தரும் இவரை சுந்தரேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர். கிழக்கு பார்த்த சந்நிதி. கஜ ப்ருஷ்ட விமானம்.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் சௌந்தராம்பிகை எனப்படும் திருவுடை நாயகி, பெயருக்கேற்றார் போல் அழகு திருவுருவமாக எழுந்தருளியுள்ளார்.
அம்பிகை சந்நிதியின் வலச் சுற்றில் - வைஷ்ணவி, வாராஹி, மஹாலட்சுமி, ப்ராம்மி, சண்டிகை, துர்க்கை ஆகிய தேவிகளை தரிசிக்கலாம்.
கருவறை வாசலில் துவார கணபதி, நாக சுப்ரமண்யன் மற்றும் சிவாலய கோஷ்ட மூர்த்தங்களை தரிசிக்கலாம். உமா மகேஸ்வரரின் உலாத் திருமேனிகள், வீரபத்ரர், மாகாளி மற்றும் ஸ்ரீ தேவி பூ தேவி சஹித கருணாகரப் பெருமாள் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
புதன் இறைவனுடன் ஐக்கியமாகி விட்டதால் தனியாக புதன் சந்நிதி இல்லை. நவகிரகங்களுள் இருக்கும் புதனை வணங்க, இறைவனை வழிபட்டால் போதும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.