அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரஸ்வாமி திருக்கோவில், குன்றத்தூர் (வட நாகேஸ்வரம்)
God Name : மூலவர்: திருநாகேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவாரூர்
Call : +91-
ஆதிசேஷன் இறைவனை பூஜித்த ஸ்தலங்கள் எல்லாம் திருநாகேஸ்வரம் எனப் பெயர் கொண்டன.
அநபாய சோழனின் பிரதான மந்திரியாகப் பணியாற்றிய சேக்கிழார், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சென்று நாகேஸ்வரரை தரிசிப்பது வழக்கம். அமைச்சர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனது சொந்த ஊரான குன்றத்தூருக்கு வந்து விட்டார். இங்கிருந்து அடிக்கடி திருநாகேஸ்வரம் போக முடியவில்லையே என வருந்திய சேக்கிழார், திருநாகேஸ்வரத்தில் இருப்பது போலவே குன்றத்தூரில் இக்கோவிலை நிர்மாணித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
திருநாகேஸ்வர ஸ்தலத்துள் உறைபவராக இருப்பதால் இறைவனுக்கு திருநாகேஸ்வரர் என்ற பெயர் உண்டானது.
ராகு அம்சம் இறைவனோடு ஒன்றி இருப்பதால் ராகு ஸ்தலமாகப் போற்றப்படுகின்றது.
சென்னையிலுள்ள நவகிரக ஸ்தலங்களுள் - ராகு ஸ்தலம்.
மூலவர்: திருநாகேஸ்வரர், அம்பாள்: காமாட்சி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் திருநாகேஸ்வரர். சதுர ஆவுடையாருடன் உயரமான பாணம் கொண்டு காட்சி தரும் பெரிய திருமேனி. நெற்றிப்பட்டை ருத்ராட்சங்களுடன், பஞ்ச-நாகங்கள் குடை பிடிக்க, கம்பீரமாக தரிசனம் தருகின்றார். அழகே உருவாக எழுந்தருளி அருள் புரிகிறாள் அன்னை காமாட்சி.
சிவாலய கோஷ்ட தெய்வங்களுள் விஷ்ணு துர்க்கையின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது.
வலச்சுற்றில் வீரபாகு, காசி விஸ்வநாதர், காளிங்க நர்த்தனர், அருணாசலேஸ்வரர், பைரவர், சத்ய நாராயணா, லட்சுமி - சரஸ்வதி ஆகிய தெய்வங்களை தரிசிக்கலாம்.
இத்தலத்தில் ராகு சிவலிங்கத்தோடு ஒன்றியிருப்பதால், ராகுவுக்கென தனி சந்நிதி கிடையாது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.