அருள்மிகு ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் திருக்கோவில் (ஸ்ரீபெரும்புதூர்)
God Name : ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
முன்னொரு காலம், கயிலையில் சிவபெருமான் தாண்டவம் ஆடுகையில், பூத கணங்கள் பரிகசித்து சிரித்தன. இதனால் கோமுற்ற சிவபெருமான் பூத கணங்களை சபித்து, தன்னை விட்டு விலக்கி விட்டார்.
வருத்தம் கொண்ட பூத கணங்கள், பிரம்ம தேவரின் ஆலோசனைப்படி, பூலோகம் வந்து, இத்தலத்திலுள்ள அருணாரண்ய க்ஷேத்ரத்தில் தவமிருந்தன. ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் பிரத்யட்சமாகி, பூதங்களின் சாபத்தைப் போக்கி, சிவபெருமானிடம் திருப்பி அனுப்பி வைத்தார் என ஸ்தல வரலாறு.
அநந்தன் (ஆதிசேஷன்) சிருஷ்டித்த தடாகமான அனந்த சரஸ்ஸில் நீராடி பாபங்களைப் போக்கிக் கொண்ட ஹரிதன் என்பவன் தனது கோ - தோஷம் நீங்கப் பெற்றான். பூதங்களும் இதில் நீராடின. பூதங்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த புண்ணிய நகரம் உண்டாக்கப்பட்டதால் இதை பூதபுரி என்றும் ஸ்ரீ பெரும்புதூர் என்றும் அழைக்கின்றனர் என ஸ்தல வரலாறு.
விசிஷ்டாத்வைத சித்தாந்த ஸ்தாபகரான ஸ்ரீராமாநுஜர் அவதரித்த ஸ்தலம். ஸ்ரீராமாநுஜர் - ஆதிசேஷனின் அம்சம் என்பதால் ராஹு - கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது.
சித்திரை மாத திருவாதிரையில் ஸ்ரீ ராமாநுஜரின் அவதார உற்சவம், திருமேனி திருமஞ்சனம் காண்பது மிகுந்த புண்ணியம் என்பர்.
12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில். தென்கலை சம்ப்ரதாயம். வைகானஸ ஆகமம் பின்பற்றப்படுகிறது.
அபிமான ஸ்தலம்.
மூலவர்: ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள். தாயார்: ஸ்ரீ எதிராஜ நாதவல்லி.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சங்கு - சக்கரதாரியாக, சதுர் புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். ஹரித மகரிஷி, பூத கணங்கள், சிவன் ஆகியோர்க்கு பிரத்யட்சமானதாக ஐதீகம்.
உற்சவ மூர்த்தி மூலவரைப் போன்றே தோற்றம் கொண்டுள்ளார். அபய ஹஸ்தம், ஆஹ்வான ஹஸ்தம் கொண்டு சேவை சாதிக்கின்றார்.
குதிரைக்கால் மண்டபத்திற்கு கிழக்கே எதிராஜ நாதவல்லித் தாயார் சந்நிதி கொண்டுள்ளார். ஸ்ரீரங்க நாச்சியார் என்ற திருநாமமும் உண்டு. பூத கணங்களே நிர்மாணித்த சதுர்ஸ்தம்ப மண்டபம் உள்ளது.
கருடாழ்வார், ஸ்ரீ விநய ஆஞ்சநேயர், மண்ணளந்த பெருமாள், ஸ்ரீராமர், ஸ்ரீவேணுகோபாலன், ஆண்டாள், நம்மாழ்வார், ஆளவந்தார், திருக்கச்சி நம்பி ஆகியோரை சேவிக்கலாம்.
தனி சந்நிதியில் உடையவர் தெற்கு நோக்கி சேவை சாதிக்கின்றார். அவரது காலத்திலேயே, அவரது திருமேனி அவரைப் போன்றே செய்யப்பட்டது. உடையவர் அந்த விக்ரஹத்தை தாமே ஆலிங்கனம் செய்து கொண்டு, அதில் தமது சக்தியை பிரவேசம் செய்ததால், தமர் உகந்த திருமேனி என திருநாமம் கொண்டார். படமெடுத்த பாம்பை பின்புறமாக கொண்டு காட்சி தரும் ஸ்ரீ ராமாநுஜரை வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என ஐதீகம்.
குளிர் காலத்தில் உடையவருக்கு வெந்நீரில் திருமஞ்சனம் செய்து தொப்பி, சால்வை அணிவிப்பார்கள். கோடை காலத்தில் சந்தன அபிஷேகம் செய்வார்கள்.
மணவாள மாமுனியின் சந்நிதி கோபுர வாசலுக்கு தெற்கே உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.