அருள்மிகு ஷிர்டி சாயி மந்திர் (ஈஞ்சம்பாக்கம்)
God Name : ஷிர்டி சாயி பாபா
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
வெள்ளை சலவைக் கல் கொண்டு உருவாக்கப்பட்ட, எண்கோண வடிவ மண்டபத்துள் வல்லப கணபதி பத்து திருக்கரங்களுடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து ஆசி வழங்குகின்றார்.
மூலஸ்தானத்தில் ஷிர்டி சாயி பாபா மூலவராக எழுந்தருளியுள்ளார். தூய்மையான வெள்ளை பளிங்கு சலவைக்கல் கொண்டு உருவாக்கப்பட்ட அழகிய திருமேனி. தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் துனி, உதி, சாம்பல் இவைகளை புனிதவலம் வரலாம்.
சிவ-பார்வதி, துர்க்கை, ஸ்ரீ ராமர் - சீதை - லக்ஷ்மணன் - ஹனுமன், வெங்கடேஸ்வரர், ராதா - கிருஷ்ணன், நவகிரகங்கள், வள்ளி - தெய்வயானை உடனாய முருகன், காயத்ரி தேவி, தத்தாத்ரேயர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
கல்பத்தரு எனப்படும் ஆசைகளை நிறைவேற்றும் விருட்சத்தில் மஞ்சள் கயிற்றை, பிரார்த்தனை செய்து கொண்டு கட்டுகின்றனர். வியாதிகள் அண்டாமலிருக்க தன்வந்திரி மரத்தை 9 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.
கோ சாலை, அன்னதானக் கூடம், பிரார்த்தனைக் கூடம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தி தந்துள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.