அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் (கொளப்பாக்கம்)

God Name : மூலவர்: அகஸ்தீஸ்வரர்் சிறப்பு மூர்த்தம்: சூரியன்.

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவாரூர்

Call : +91-

மூலவர்: அகஸ்தீஸ்வரர்் சிறப்பு மூர்த்தம்: சூரியன்் அம்பாள்: ஆனந்தவல்லி. மூலஸ்தானத்தில் அகஸ்தீஸ்வரர் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகின்றார். சர்வாலங்கார பூஷணமாக, தேஜோமயமாகக் காட்சி தரும் பாணலிங்கம். வாகீச மஹாதேவர் என்ற திருநாமமும் உண்டு. கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக அமைந்துள்ளன. அகஸ்தியர் வழிபட்ட லிங்கம் என்பதனால் அகஸ்தீஸ்வரர் எனப் பெயர் பெற்றார். அழகே உருவாக நின்ற கோலத்தில் ஆனந்தவல்லி தரிசனம் தருகின்றாள். பிரதான தெய்வங்கள் அனைத்தும் கிழக்கு நோக்கிய சந்நிதிகளாக அமைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் சூரியனை நேருக்கு நேர் பார்ப்பது போன்ற அமைப்பில் சூரியன் கோவில் கொண்டுள்ளார். ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் உள்ள சூரியனின் சுதைச் சிற்பம் அழகாக இருக்கிறது. வாதாபி கணபதியின் தோற்றத்தில் ராஜ கணபதி அழகாகக் காட்சி தருகின்றார். தேவமயில் மீதமர்ந்த முருகன் காட்சி தருகின்றார். மரகத மயில் எனக் கூறப்படும் தேவ மயில் இங்கு மட்டுமே உள்ளதாக அர்ச்சகர் தெரிவிக்கின்றார். வள்ளி - தெய்வயானை தேவியர்களுடன் உள்ளனர். விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் எழுந்தருளியுள்ளார். ருண ஹர ஈஸ்வரரை தரிசிக்கலாம். மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் சூரிய பகவான் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். சூரிய தசை/புக்தி நடப்பவர்களும், சூரிய தோஷம் உள்ளவர்களும் இவரை வழிபட்டு நற்பலன்களை அடைகின்றனர். இந்த ஆலயம் சூரியனின் ஆதிக்கத்தில் உள்ளது. இவ்வாலயத்தின் விசேஷ மூர்த்தமாக எழுந்தருளியுள்ள பைரவர் மிகுந்த வரப்பிரசாதி எனப் போற்றப்படுகின்றார். நந்திகேஸ்வரரின் பார்வைக்கு நேராக 15 துவாரங்களுடன் கூடிய பலகணி ஒன்று உள்ளது. இதை 12 ராசிகளாகக் கருதுகின்றனர். சென்னையிலுள்ள நவகிரக ஸ்தலங்களுள் - சூரியனுக்குரிய ஸ்தலம். (கோவிலருகே கடைகள் இல்லை. பூஜை சாமான்கள் எடுத்துச் செல்வது உகந்தது.)
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.